இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் நிகழ்ந்த விபத்து குறித்து நடிகை காஜல் அகர்வால் டிவீட் பதிவு.
ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் – 2 படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக வட மாநிலங்களில் நடைபெற்று வந்தது. அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் உள்ள தனியாருக்கு சொந்தமான பொழுதுபோக்கு பூங்காவில் நடைபெறுவதாக இருந்தது. இதற்கான செட் அமைக்கும் பணிகள் கடந்த சில நாட்களாக அங்கு நடைபெற்று வந்தது.
இந்நிலையில் சென்னையில் நடந்த படப்பிடிப்பின் போது பெரிய விபத்து ஏற்பட்டு அனைவரையும் கலங்கச் செய்துள்ளது. கிரேன்கள் விழுந்து 3 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் 10 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்தின் போது செட்டில் கமல்ஹாசன் இருந்தார். காயமடைந்தவர்களுடன் அவர் மருத்துவமனையில் உள்ளார்.
இந்த படப்பிடிப்பு சென்னையில் உள்ள ஈவிபி (EVP) ஸ்டுடியோவில் நடந்து கொண்டிருந்தது என்பதை எங்களுக்குத் தெரியப்படுத்துகிறோம். இந்த விபத்தில் மது (29), சந்திரன் (60), கிருஷ்ணா (34) ஆகியோர் உயிரிழந்துள்ளனர். ஊடக அறிக்கையின்படி, நேற்று இரவு 9.30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக நடிகை காஜல் அகர்வால் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பகிர்ந்துள்ளார். அதில்.,
இதய வலியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. நேற்றிரவு முதல் எனது சகாக்களின் எதிர்பாராத, அகால இழப்பை நான் உணர்கிறேன். கிருஷ்ணா, சந்திரன் மற்றும் மது. உங்கள் குடும்பங்களுக்கு அன்பு, வலிமை மற்றும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறேன்.
நேற்றிரவு நடந்த பயங்கரமான கிரேன் விபத்தில் அதிர்ச்சி, குழப்பம், ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் இருக்கிறேன். உயிரோடு இருந்து இந்த ட்வீட்டைப் பதிவேற்ற ஒரு நொடி மட்டுமே ஆனது. அந்த ஒரு தருணம். நன்றியுணர்வோடு இருக்கிறேன். நேரம் மற்றும் உயிரின் மதிப்பு குறித்து நிறைய கற்றுக்கொண்டேன்" என்று தெரிவித்துள்ளார் காஜல் அகர்வால்.
Words cannot describe the heartache I feel at the unexpected,untimely loss of my colleagues from lastnight.Krishna,Chandran and Madhu.Sending love,strength and my deepest condolences to your families.May god give strength in this moment of desolation. #Indian2 @LycaProductions
— Kajal Aggarwal (@MsKajalAggarwal) February 20, 2020
In so much shock, denial, trauma from the monstrous crane accident last night. All it took was a fraction of a second to stay alive and type this tweet. Just that one moment. Gratitude. So much learning and appreciation for the value of time and life. — Kajal Aggarwal (@MsKajalAggarwal) February 20, 2020