வேட்டையாடு விளையாடு 2 - கமல் சொல்வது என்ன?

வேட்டையாடு விளையாடு 2 படம் பற்றி இரண்டு வருடங்களுக்கு முன்னதகாவே கௌதம் வாசுதேவ் தன்னிடம் பேசியதாக கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.

Written by - க. விக்ரம் | Last Updated : Sep 4, 2022, 11:05 AM IST
  • வெந்து தணிந்தது காடு ஆடியோ, ட்ரெய்லர் வெளியீட்டு விழா
  • கமல் ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்
  • அந்த விழாவில் வேட்டையாடு விளையாடு 2 குறித்து பேசினார்
வேட்டையாடு விளையாடு 2 - கமல் சொல்வது என்ன? title=

சிம்பு - மௌதம்  வாசுதேவ் ஆகியோர் மீண்டும் இணைந்திருக்கும் படம் வெந்து தணிந்தது காடு. ஜெயமோகன் எழுதிய சிறுகதையை அடிப்படையாக கொண்டு உருவாகியிருக்கும் இப்படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். வேல்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. இதன் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடந்தது. அதில் சிம்பு, கமல், ரஹ்மான், கௌதம் வாசுதேவ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

விழாவில் பேசிய கமல் ஹாசன், “வெந்து தணிந்தது காடு என்பது பாரதியாரின் வரிகள். அது எனக்கு மிகவும் பிடிக்கும். அதன் அடுத்த வரிகள், ''தழல் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ". அதுபோல் இந்த படத்திலும் அந்த நெருப்பு இருக்குமென நம்புகிறேன். வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கணேஷ், என்னை தந்தை போல் என்பார். அவருக்கு, நான் தனியாக ஏதும் செய்யவில்லை. 

 

தமிழ் படத்தை தூக்கி நிறுத்துவது தமிழ் படம்தான். தமிழ் படத்தை கெடுப்பதும் தமிழ் படம் தான். நல்ல படம் கொடுக்க வேண்டும். புதிதாக கொடுக்க கொடுக்க ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள். தமிழ் ரசிகர்கள் நல்ல படங்களை கைவிட்டது இல்லை. தமிழ் சினிமாவை தூக்கி நிறுத்தியது எந்த நடிகரும் இல்லை. அது ரசிகர்கள் மட்டுமே. மக்கள் ஆதரவு தருவார்கள். சிம்பு கடின உழைப்பாளி. படத்தின் வெற்றி விழாவில் சிம்பு ஆனந்த கண்ணீர் விடுவதை நான் பார்க்க வேண்டும்.

Gowtham Menon

வேட்டையாடு விளையாடு 2-ம் பாகம் பற்றி 2 ஆண்டுகளுக்கு முன்பு கௌதம் வாசுதேவ் சொன்னார். ஆனால் இடையில் கொரோனா வந்துவிட்டது. வேல்ஸ் பிலிம்சில் படம் செய்ய கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் இம்மாதிரி வாய்ப்புகளை நான் 'மிஸ்' செய்வதில்லை. நாளையே பேசி முடித்துவிடலாம்” என்றார். இதனால் வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பில் வேட்டையாடு விளையாடு 2 உருவாகுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மேலும் படிக்க | விஷ்ணு விஷாலுக்கு இவ்வளவு பெரிய மகனா? வைரலாகும் புகைப்படம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News