அவமானப்பட்ட அபிராமி கொடுத்த அதிர்ச்சி - கார்த்திகை தீபம் அப்டேட்!

Karthigai Deepam: இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் தீபாவும் அபிராமியும் கல்யாண வீட்டிற்கு கிளம்பி வந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.   

Written by - RK Spark | Last Updated : Feb 6, 2024, 01:31 PM IST
  • வெள்ளை புடவையால் வெடித்த பிரச்சனை.
  • அவமானப்பட்ட அபிராமி கொடுத்த அதிர்ச்சி.
  • கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்.
அவமானப்பட்ட அபிராமி கொடுத்த அதிர்ச்சி - கார்த்திகை தீபம் அப்டேட்!

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் தீபாவும் அபிராமியும் கல்யாண வீட்டிற்கு கிளம்பி வந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது இருவரும் கல்யாண வீட்டிற்கு வர அங்கிருந்தவர்கள் பகையை எதுவும் மனதில் வச்சிக்காமல் வந்திருக்கீங்க என்று வரவேற்று நலங்கு வைக்க சொல்ல இவர்களும் நலங்கு வைத்து அந்த பெண்ணிற்காக எடுத்த புடவையை கொடுக்க அதை வாங்கி பிரித்த கல்யாண பெண் வெள்ளை புடவையும் விபூதியும் இருப்பதை பார்த்து பயத்தில் கீழே போட்டு விட அதை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். 

Add Zee News as a Preferred Source

karthigai

மேலும் படிக்க | Vikranth: விஜய்யின் மகன் எப்படிப்பட்டவர் தெரியுமா? மனம் திறந்த விக்ராந்த்!

நீ பழைய பகையை மனசில் வச்சி தான் இப்படி கீழ்த்தரமான வேலை பண்ணிருக்க என்று அபிராமியை திட்டி வெளியே துரத்த தீபா கண் கலங்கி நிற்கிறாள், அபிராமி நீ கோவிலில் விளக்கு போடலைனு திட்டினதுனால தான் இப்படி பண்ணி இருக்கே என்று தீபாவை திட்டுகிறாள், இனிமே நீ நான் குடிக்க தண்ணி கூட கொடுக்க கூடாது என்று ஆவேசப்படுகிறாள். இங்க நடந்த விஷயம் எதுவும் கார்த்திக்கு தெரியவும் கூடாது என கண்டிஷன் போடுகிறாள். 

அனால், இங்கிருந்து இதை பார்த்த கார்த்தியின் பெரியம்மா ஒருவர் கார்த்திக்கு போன் போட்டு நடந்த விஷயங்களை சொல்லி எனக்கு என்னமோ தீபா மேல தப்பு இருக்க மாதிரி தெரியல, அபிராமியும் இப்படி செய்ய கூடிய ஆள் கிடையாது, ஏதோ தப்பா நடந்திருக்கு என்று சொல்ல நான் பார்த்துக்கறேன் என்று கார்த்திக் போனை வைக்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

மேலும் படிக்க | G.O.A.T: விஜய்யால் தமிழ் சினிமாவிற்கு எத்தனை கோடிகள் இழப்பா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News