Karthigai Deepam: தீபா செய்ய போவது என்ன? கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்!

Karthigai Deepam: நேற்றைய எபிசோடில் பர்த் டே பங்க்ஷனில் தீபா தான் பல்லவி என்ற உண்மையை கார்த்திக் உடைக்க எல்லாரும் அதிர்ச்சி அடைந்தனர். இதனை தொடர்ந்து இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.   

Written by - RK Spark | Last Updated : Feb 1, 2024, 01:23 PM IST
  • மன்னிக்க மறுக்கும் கார்த்திக்.
  • தீபா செய்ய போவது என்ன?
  • கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்
Karthigai Deepam: தீபா செய்ய போவது என்ன? கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்!

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் பர்த் டே பங்க்ஷனில் தீபா தான் பல்லவி என்ற உண்மையை கார்த்திக் உடைக்க எல்லாரும் அதிர்ச்சி அடைந்தனர். இதனை தொடர்ந்து இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது, கார்த்தி சொன்ன விஷயத்தை கேட்டு மீனாட்சி, அருணாச்சலம் ஆகியோர் சந்தோஷப்பட அபிராமி இவ்வளவு பெரிய உண்மையை மறைத்திருக்கனா நீ எவ்வளவு பெரிய கல் நெஞ்ச காரியா இருப்ப என கோபப்படுகிறாள். பிறகு கார்த்திக் தீபா தம்பிக்காக பாட ஒத்துக்கிட்டா. இந்த விஷயத்தை யார்கிட்டயும் சொல்ல மாட்டேன்னு பால அடிச்சு சத்தியம் செய்ததால் யார்கிட்டயும் சொல்லாம இருந்தா, அவளை நான் பெரிய பாடகி ஆக்குவேன் என்று சொல்கிறான். 

Add Zee News as a Preferred Source

kd2

மேலும் படிக்க | கமல்ஹாசன் கைவிட்ட படங்கள்..இவ்ளோ பெரிய லிஸ்டா..!

அதுமட்டுமின்றி நம்ம கம்பெனியில மட்டும் இல்லாம மத்த நிறைய கம்பெனிகள்ல தீபாவ பாட வைப்பேன் என்று சொல்ல அபிராமி நம்ப கம்பெனியில் பாடுனா போதாதா என்று கேட்க மற்றும் கம்பெனிகளில் பாடினால் தீபாவால் நம்ம குடும்பத்துக்கு தான் பெருமை என்று சொல்கிறான். இதைத்தொடர்ந்து தீபா கண்ணீருடன் ரூமுக்கு சென்று விட கார்த்திக் பின்னாடியே வர காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறாள் தீபா. நானே உங்ககிட்ட இந்த விஷயத்தை சொல்லலாம்னு தான் இருந்தேன் உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்குன்னு சொல்லி இருந்ததும் இதைப் பற்றி சொல்ல தான் என்று கண் கலங்கி அழுகிறாள். 

மேலும் என்னை மன்னிச்சுடுங்க என்று காலில் விழ கார்த்திக் அது மட்டும் முடியாது என அதிர்ச்சி கொடுக்கிறான். மீனாட்சி என்னாச்சி கார்த்திக் என்ன சொன்னான் என்று கேட்க தீபா நடந்த விஷயத்தை சொல்லி வருத்தப்படுகிறாள். அடுத்ததாக அபிராமி கல்யாணம் ஒன்றிற்கு ஐஸ்வர்யாவை கூட்டி செல்ல முடிவெடுக்க கார்த்திக் தீபாவை அழைத்து செல்லுங்கள், கல்யாண பெண்ணுக்கு எடுப்பதாக சொல்லியிருந்த புடவையை தீபாவே எடுக்கட்டும் என சொல்ல அபிராமியும் சம்மதம் தெரிவிக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

மேலும் படிக்க | தனுஷ் 51 படப்பிடிப்பால் போக்குவரத்து பாதிப்பு..பரபரப்பை ஏற்படுத்திய படக்குழு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News