பிக்பாஸ் கவினுக்கு ஆகஸ்ட் மாதம் திருமணமா? பொண்ணு யார் தெரியுமா?

Biggboss Kavin Marriage: தற்போது இரண்டு படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் கவினுக்கு அடுத்த மாதம் ஆகஸ்ட் 20ம் தேதி திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் ஒன்று வெளியாகி வைரலாகி வருகின்றது.  

Written by - Vijaya Lakshmi | Last Updated : Aug 1, 2023, 04:30 PM IST
  • பிக்பாஸ் புகழ் நடிகர் கவினுக்கு விரைவில் திருமணம்.
  • டாடா திரைப்படம் மூன்றே வாரத்தில் 15 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
பிக்பாஸ் கவினுக்கு ஆகஸ்ட் மாதம் திருமணமா? பொண்ணு யார் தெரியுமா? title=

பிக்பாஸ் புகழ் நடிகர் கவினுக்கு திருமணம்: விஜய் தொலைக்காட்சியில் நடிகராக தன் வாழ்வைத் துவக்கிய நடிகர் கவின், 2011 ஆம் ஆண்டு கனா காணும் காலங்கள் என்ற தொடரில் 'சிவா' என்னும் கதாபாத்திரம் மூலம் சின்னத்திரையில் நடிகராக அறிமுகமானார். அதை தொடர்ந்து அதை தொடர்ந்து சரவணன் மீனாட்சி (2012-2013), தாயுமானவன் (2013-2014), போன்ற தொடர்களில் நடித்தார். 2013 ஆம் ஆண்டு சரவணன் மீனாட்சி 2 என்ற தொடரின் மூலம் கதாநாயகனாக நடித்தார். இந்த தொடர் இவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. அதை தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு சத்ரியன் என்ற திரைப்படத்தில் துணைக் கதாபாத்திரத்தில் நடித்தார். 2019 ஆம் ஆண்டு நட்புன்னா என்னான்னு தெரியுமா என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக நடித்தார். பின்னர் அதே வருடம் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் 3 என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்றார்.

ஆரம்பத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவருக்கு நெகடிவ் விமர்சனங்களே கிடைத்தாலும், பின்னர் பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைக்க துவங்கியது. பிக்பாஸ் வீட்டின் உள்ளே இருக்கும் போது சக போட்டியாளரும், இலங்கை செய்தி வாசிப்பாளருமான லாஸ்லியாவை காதலித்தார். மேலும் தான் காதலித்த லாஸ்லியா ஃபைனனில் செல்ல வேண்டும் என்பதால் பிக்பாஸ் கொடுத்த ஐந்து லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு நிழச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். இதனால் இவர் மீது இருந்த மதிப்பு மக்களிடையே கூடியது.

மேலும் படிக்க | 3300 கோடியை கட்டிக்காப்பாற்றிய அரவிந்த் சுவாமி! எப்படி தெரியுமா?

இதன்பின்னர் கவின் ஒரு மேடையில், எனக்கும் லாஸ்லியாவிற்கும் இடையே செட் ஆகாது. நாங்கள் காதலிக்கவில்லை என்று பிரிந்துவிட்டோம் என தெளிவுபடுத்தியிருந்தார். அதன் பிறகு இருவரும் வெவ்வேறு படங்களில் நடித்து, சினிமாவில் கவனம் செலுத்தி வந்தனர்.

சமீபத்தில் அறிமுக இயக்குநர் கணேஷ் கே. பாபுவின் உருவாக்கத்தில் நடிகர் கவினின் 'டாடா' படத்தில் நடித்தார். இப்படத்தை அம்பேத் குமார் தயாரித்திருந்தார். இந்த படத்தில் நடிகர்கள் பாக்யராஜ், அபர்ணா தாஸ், ஐஸ்வர்யா பாஸ்கரன், விடிவி கணேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். கம்மி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட டாடா திரைப்படம் ரசிகர்களிடையே சிறந்த வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி ஓடிடியிலும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் டாடா திரைப்படம் மூன்றே வாரத்தில் 15 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது கவின் திருமணம் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, கவினுக்கு ஆகஸ்ட் 20 ஆம் தேதி, திருமணம் நடைபெற உள்ளதாகவும், பெற்றோர் பார்த்து வைத்த பெண்ணை தான் கவின் திருமணம் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து அவரது ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அவரே வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே தற்போது கவின் டான்ஸ் மாஸ்டர் சதீஷ் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இந்த படத்தை ரோமியோ பிச்சர்ஸ் ராகுல் தயாரிக்க இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த திரைப்படமும் காதல் கதைக்கு முக்கியத்துவம் உள்ள படம் என சொல்லப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் படிக்க | விஜய்யின் லியோ படத்தால் தள்ளி போகும் அட்லீயின் ஜவான்! ஏன் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News