‘நாங்க ரொம்ப பிஸி’ படத்தின் first look வெளியீடு

இந்த படத்தின் ரீமேக் பதிப்பின் first look, 'மாயா பஜார் 2016' இன் first look-ஐப் போலவே இருக்கிறது. ஆனால் தமிழில் இந்த லுக் இன்னும் வண்ணமயமாக உள்ளது.

Written by - ZEE Bureau | Last Updated : Oct 30, 2020, 12:17 PM IST
  • 'நாங்க ரொம்ப பிஸி' படத்தின் first look போஸ்டர் வெளிவந்தது.
  • இப்படத்தை சுந்தர் சி தயாரித்துள்ளார்.
  • படம் இயக்குனர் பத்ரியின் இயக்கத்தில் உருவாகி வருகிறது.
‘நாங்க ரொம்ப பிஸி’ படத்தின் first look வெளியீடு

கன்னடத்தில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற 'மாயா பஜார் 2016' திரைப்படம், தமிழில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இப்படத்தை சுந்தர் சி (Sundar C) தயாரிக்கிறார். இவரிடம் முன்னர் இணை இயக்குனராக இருந்த பத்ரி இப்படத்தை இயக்குகிறார்.

படத்தின் படப்பிடிப்பு விரைவிலேயே நிறைவடையவுள்ளது. படத்திற்கு 'நாங்க ரொம்ப பிஸி' என்று பெயரிடப்பட்டுள்ளது. படத்தின் முன்னணி நட்சத்திரங்களைக் கொண்ட படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்த படத்தின் ரீமேக் பதிப்பின் first look, 'மாயா பஜார் 2016' இன் first look-ஐப் போலவே இருக்கிறது. ஆனால் தமிழில் இந்த லுக் இன்னும் வண்ணமயமாக உள்ளது.

'நாங்க ரொம்ப பிஸி'  படத்தில் பிரசன்னா (Actor Prasanna), ஷாம், ஸ்ருதி மராத்தே, அஸ்வின் ககமனு, யோகி பாபு, விடிவி கணேஷ், ரிதிகா சென் மற்றும் பலர் நடிக்கிறார்கள். சுந்தர் சி-க்கு இப்படத்தில் அதிக ஆர்வம் ஏற்பட்டதால், படத்தின் ரீமேக் உரிமையைப் பெற்றார்.

ALSO READ: காஜல் அகர்வாலின் மனம்கவர் கள்வன் கெளதம் கிச்லுவின் காதல் கதை தெரியுமா?

படத்தின் கதைக்களம் டீமானிடைசேஷன் அதாவது பண மதிப்பிழப்பு நாட்களை மையமாகக் கொண்டுள்ளது. மேலும் இயக்குனர் தமிழ் சினிமா பார்வையாளர்களுக்கு ஏற்ப திரைக்கதையை மாற்றியிருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், சுந்தர் சி தான் இயக்கும் அடுத்த படமான 'அரண்மனை 3' படத்திற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார், இப்படத்தில் ஆர்யா மற்றும் ராஷி கன்னா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

ALSO READ: Watch: அக்கரையிலும் அக்கறை மாறாமல் Anushka-வை கவனிக்கும் Virat, வைரலாகும் video!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News