‘லியோ’ படத்தில் த்ரிஷாவின் கதாப்பாத்திரம் இதுதான்..!

Leo Trisha Name : லியோ படம் விரைவில் வெளியாக உள்ளதை தொடர்ந்து, இதில் த்ரிஷாவின் கதாப்பாத்திரம் என்ன என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.  

Written by - Yuvashree | Last Updated : Oct 15, 2023, 01:37 PM IST
  • லியோ படம், வரும் 19ஆம் தேதி வெளியாகிறது.
  • த்ரிஷா விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார்.
  • இப்படத்தில் த்ரிஷாவின் பெயர் என்ன தெரியுமா?
‘லியோ’ படத்தில் த்ரிஷாவின் கதாப்பாத்திரம் இதுதான்..!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம், லியோ. இந்த படம் வரும் 19ஆம் தேதி வெளியாக உள்ளது. இதில், நடிகை த்ரிஷா விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். 

Add Zee News as a Preferred Source

பல வருடங்களுக்கு இணைந்து நடிக்கும் விஜய்-த்ரிஷா:

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக இருப்பவர் த்ரிஷா. இவர் நடிகர் விஜய்யுடன் சேர்ந்து கில்லி, குருவி, திருப்பாச்சி, ஆதி உள்ளிட்ட படங்களில் நடித்தார். இவர்களின் ஜோடி, ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்ட ஒன்று. படத்தில் நல்ல காதலர்களாக நடிக்கும் இவர்கள், திரையை தாண்டி நல்ல நண்பர்களாகவும் இருக்கின்றனர். 2008ஆம் ஆண்டு கடைசியாக ஒன்றாக படத்தில் சேர்ந்து நடித்த இவர்கள் கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் கழித்து லியோ படத்தில் இணைகின்றனர். 

லியோ படத்தில் த்ரிஷாவின் கதாப்பாத்திரம்..

லியோ படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியானதில் இருந்து ரசிகர்கள் இப்படம் மீது பெரிய எதிர்பார்ப்புகளை கொண்டுள்ளனர். த்ரிஷா இப்படத்தில் நடித்துள்ளதும் அதற்கு ஒரு காரணமாக உள்ளது. இப்படம், லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸில் (LCU) இருக்கிறதா இல்லையா என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு இருந்து வருகிறது. கைதி படம், எல்.சி.யூவில் உள்ளது. இப்படத்தின் வில்லனாக ஹரிஷ் பரேடி நடித்திருந்தார். இப்படத்தில் இவர் பேசும் ஒரு காட்சியில், இன்னும் போஸ்டிங் போடாத போலீஸாரின் பெயரை கூறுவார்கள். அதில், சத்யா என்ற பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும். இதுதான் த்ரிஷாவின் பெயர் என்றும் அவர் லியோ படத்தில் அவர் ஒரு காவல் அதிகாரி கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | ‘லியோ’ படம் எப்படியிருக்கு…? வெளியானது முதல் விமர்சனம்..!

த்ரிஷா இப்படத்தில் உயிருடன் இருப்பாரா..? 

லோகேஷ் கனகராஜ் படம் என்றாலே அதில் பெண் கதாப்பாத்திரங்களை உயிருடன் விட்டு வைக்கமாட்டார் என்பதை பலரும் அறிவர். கைதி படத்தில் கார்த்தியின் மனைவியின் கதாப்பாத்திரத்தை காட்டாமலேயே காணாமல் செய்து விட்டார். விக்ரம் படத்திலும் அமரின் காதலியாக வரும் காயத்ரியை கொன்றிருப்பார். மாஸ்டர் படத்தில் காதல் ஜோடியாக வரும் பார்கவ்வை கொன்றிருப்பார். இப்படி காதல் உடன் தொடர்புடைய எல்லா கதாப்பாத்திரத்தை கொலை செய்யும் லோகேஷ் கனகராஜ், லியோ படத்திலும் த்ரிஷாவின் கதாப்பாத்திரத்தை கொன்றிருப்பாரோ என்ற சந்தேகம் கூறப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு வெளியாகியிருந்த த்ரிஷாவின் போஸ்டரிலும் ரத்தம் தெறிக்கும் வகையில் டிசைன் செய்யப்பட்டிருந்தது. அதனாலும் த்ரிஷாவின் கதாப்பாத்திரம் குறித்த சந்தேகம் ரசிகர்களுக்கு இருக்கிறது. 

லியோ பட நட்சத்திரங்கள்..

லியோ படத்தில் தமிழ் திரையுலகை சேர்ந்த முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ளனர். நடிகர் அர்ஜூன், இந்த படத்தில் ஹரால்டு தாஸ் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். பான் இந்திய நடிகர் சஞ்சய் தத், இந்த படத்தில் ஆண்டனி தாஸ் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மலையாள நடிகர் மாத்யூ தாமஸ், இப்படத்தில் விஜய்க்கு மகன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். கெளதம் வாசுதேவ் மேனன், இதில் காவல் அதிகாரி கேரக்டரில் வருகிறார். பிரியா ஆனந்த், மிஷ்கின் உள்ளிட்ட பலரும் இதில் முக்கிய கதாப்பாத்திரமாக வருகின்றனர். இன்னும் சில சர்ப்ரைஸ் கதாப்பாத்திரங்களும் படத்தில் இடம் பெற்றிருக்கின்றன. 

மேலும் படிக்க | ‘லியோ’ படத்தில் நடிக்க விஜய் வாங்கிய சம்பளம் எவ்வளவு? முழு விவரம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News