'Lets Get Married' படத்துடன் கைகோர்த்த பிளாக்பஸ்டர் நிறுவனம்

அனைத்து வயது ரசிகர்களும் விரும்பும் வகையில் பக்கா ரொமாண்டிக் காமெடி திரைப்படமாக தோனி என்டர்டைன்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து டெல்டா ஸ்டுடியோ நிறுவனம் வழங்கும் LGM திரைப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகயுள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jul 10, 2023, 04:07 PM IST
  • MSதோனி தயாரித்துள்ள ஹரிஷ் கல்யாணின் Let's Get Married.
  • அசத்தலான ரிலீஸ் அப்டேட் இதோ.
  • 'LGM' படத்தின் மற்றொரு முக்கிய அப்டேட் வெளியானது.
'Lets Get Married' படத்துடன் கைகோர்த்த பிளாக்பஸ்டர் நிறுவனம் title=

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், கிரிக்கெட் வீரருமான எம் எஸ் தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி தோனியின் தயாரிப்பு நிறுவனமான தோனி என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் உருவாகி வரும் முதல் தமிழ் திரைப்படமான 'எல்ஜிஎம்' திரைப்படத்தின் தமிழ்நாடு ரிலீஸ் உரிமத்தை முன்னணி தயாரிப்பு நிறுவனமான சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் கைப்பற்றி இருப்பதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தோனி எண்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட்  தன்னுடைய அதிகாரப்பூர்வமான சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

 

லெட்ஸ் கெட் மேரீட் (LGM) படம் , முற்றிலும் குடும்பங்கள் கொண்டாடும் ஒரு படமாக உருவாக்கப்பட்டு வருகின்றது. 'எல்ஜிஎம்' படம் அறிவிக்கப்பட்டதிலிருந்தே ரசிகர்கள் மத்தியில் ஓர் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது இந்த திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் ஆடியோ இன்று அதாவது ஜூலை 10 ஆம் தேதி எம்.எஸ்.தோனி மற்றும் அவரது மனைவி சாக்‌ஷி தோனி இணைந்து வெளியிடயுள்ளனர். மேலும் இந்த டிரெய்லர் நிச்சயமாக ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் தூண்டும் விதமாக அமையும் என்று கூறப்படுறது. 

மேலும் படிக்க | Thalapathy 68 அப்டேட்! 21 வருடங்களுக்கு பிறகு விஜய்யுடன் நடிக்கும் பிரபல ஹீரோ?

லெட்ஸ் கெட் மேரீட் (எல்ஜிஎம்) படத்தை இயக்குனர் ரமேஷ் தமிழ்மணி இயக்கியுள்ளார். அத்துடன் இந்த திரைப்படத்தில் ஹரிஷ் கல்யாண், நதியா, லவ் டுடே படத்தில் நடித்து 2கே கிட்ஸ்களின் பேவரைட்டாக இருக்கும் இவானா கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் இந்த திரைப்படத்தில் யோகி பாபு மற்றும் மிர்சி விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் விடிவி கணேஷும் இந்த படத்தில் காமெடி கலாட்ட செய்ய காத்திருக்கின்றனர். அண்மையில் தான் எல்.ஜி.எம். படக்குழு படப்பிடிப்பை முடித்து அதற்கான கொண்டாட்டத்தையும் மேற்கொண்டது. மேலும்  இந்தப் படம் நிச்சயமாக ஒரு நல்ல சினிமா பார்த்ததற்கான அனுபவத்தைத் தரும். ரசிகர்கள் ஒரு விறுவிறுப்பான கதைக்களத்தையும், அதன் ஊடே உணர்வுப்பூர்வமான காட்சிகளையும், வயிறு குலுங்கவைக்கும் காமெடியையும் ஒருசேரக் காணலாம் என தயாரிப்பு தரப்பு தெரிவிக்கின்றது. இந்தப் படத்தை விகாஸ் ஹசிஜா தயாரிக்க பிரியான்ஷு சோப்ரா இதன் கிரியேடிவ் தயாரிப்பாளராக உள்ளார். 

இந்த நிலையில் ஏற்கனவே இப்படத்தில் இருந்து வெளியான பர்ஸ்ட் லுக், செகண்ட் லுக் மற்றும் டீசர் ஆகியவை நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது தமிழ்நாடு ரிலீஸ் உரிமத்தை முன்னணி தயாரிப்பு நிறுவனமான சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

முன்னதாக இந்தப் படத்தின் முதல் சிங்கிளான சலானா பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. பாடலாசிரியர் மதன் கார்க்கி பாடலை எழுத ஆதித்யா ஆர்.கே பாடியிருக்கிறார். பாடலுக்கு தினேஷ் மாஸ்டர் நடனம் அமைத்திருக்கிறார். இந்தப் பாடலானது ரசிகர்களை கவர்ந்து இணையத்தில் ட்ரெண்டானது. மேலும் இந்த ஜூலை மாத இறுதியில் LGM திரைப்படம் ரிலீஸ் ஆகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | அமுதாவும் அன்னலட்சுமியும்: நீதிபதி முன்பு மீண்டும் திருத்தப்பட்ட பேப்பர்.. அமுதாவின் ரிசல்ட் என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News