மன்சூர் அலிகான் சொன்ன பிளாஷ்பேக் பொய்யா? லியோ பார்ட் 2 வருதா? லோகேஷ் கனகராஜ் ஓபன் டாக்!

Leo Movie Flashback Scene: விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. “இந்தப் படத்தின் இரண்டாம் பாதி குறித்த விமர்சனங்களை ஏற்றுக்கொள்கிறேன்” என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருந்தார்.

Written by - Bhuvaneshwari P S | Last Updated : Oct 31, 2023, 01:59 PM IST
  • ‘லியோ’ குறித்து லோகேஷ் கனகராஜ் ஓபன் டாக்.
  • லியோ பிளாஷ்பேக் காட்சிகள் பொய்யானதா? உண்மை என்ன?
  • கடந்த 19-ம் தேதி விஜய் நடிப்பில் வெளியான லியோ உலகம் முழுவதும் வெளியானது.
மன்சூர் அலிகான் சொன்ன பிளாஷ்பேக் பொய்யா? லியோ பார்ட் 2 வருதா? லோகேஷ் கனகராஜ் ஓபன் டாக்! title=

லியோ படத்தின் பிளாஷ்பேக் காட்சி அப்டேட்: லியோ படத்தின் பிளேஷ்பேக் காட்சிhttps://zeenews.india.com/tamil/photo-gallery/bigg-boss-tamil-7-wild-card-entry-dinesh-gopalasamy-rachitha-mahalakshmi-details-470322கள் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. பலருக்கும் அந்த காட்சிகள் பிடிக்கவில்லை என்றே ரிவ்யூ கொடுத்தனர். ஆனால் அந்த பிளேஷ்பேக் உண்மை இல்லை என்றும் உண்மையில் லியோ தாஸுக்கு என்ன நடந்தது என்பதும் லியோ 2 அல்லது லோகேஷ் சினிமாடிக் யூனிவர்ஸில் தான் தெரியவரும் என்றும் தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது. 

கடந்த 19-ம் தேதி விஜய் நடிப்பில் வெளியான லியோ (Leo Movie) உலகம் முழுவதும் வெளியானது. முதல் நாள் வசூலே நாடு முழுவதும் சர்ச்சையை கிளப்பியது. இந்த ஆண்டு வெளியான இந்தியப் படங்களில் முதல் நாள் வசூலில் லியோ தான் முதலிடம் என்று தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது. முதல் நாள் மட்டும் 148.5 கோடி ரூபாய் வசூலித்த இந்தப்படம் அடுத்தடுத்த நாட்களில் கலவையான விமர்சனங்களால் சறுக்கியது. லோகேஷ் கனகராஜ் படங்களுக்கென இருக்கும் அடையாளங்கள் இந்த படத்தில் மிஸ் ஆனதாக ரசிகர்கள் விமர்சித்தனர். அதோடு நரபலி என்னும் தேவையில்லாத ஒன்றை கேங்ஸ்டர் படத்தில் வைத்து படத்தின் ஓட்டத்தை தோய்வு படுத்தியதாக கடும் அதிருப்தியை விஜய் ரசிகர்கள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க | Bigg Boss Tamil: வைல்டு கார்டில் என்ட்ரி கொடுத்த தினேஷ்! யார் இவர்?

இது விஜய்க்கான (Actor Vijay) படமாகவும் இல்லாமல் லோகேஷ் கனகராஜுன் படமாகவும் இல்லாமல் போனதாக சினிமா விமர்சகர்களும் கருத்து தெரிவித்தனர். இப்படி என்ன தான் நெகடீவ் ரிவ்யூ வந்தாலும் படம் வெளியான 7 நாட்களில் 461 கோடி ரூபாயை வசூல் செய்து அசத்தியுள்ளது. 

ஒருவேளை பிளேஷ்பேக் காட்சிகள் மாற்றப்பட்டிருந்தால் படம் பல கோடி ரூபாய் இன்னும் அதிகமாக வசூலித்திருக்கும் என்றும் பேசப்பட்டது. இந்த சூழலில் தான் லோகேஷ் கனகராஜ் பேட்டி ஒன்றும் சொல்லிய சில தகவல்கள் வைரலாகி வருகிறது. அதில், லியோ தாஸுக்கு என்ன நடந்தது என்பதை மன்சூர் அலிகான் (Mansoor Ali Khan) தான் சொல்லுவார். படத்தில் மன்சூர், ஒவ்வொரு கதைக்கும் ஒவ்வொருவரிடமும் ஒரு பார்வை இருக்கும், இது என் பார்வையில் லியோவுக்கு நடந்தது என்ன என்பதை கதை என ஒரு வசனம் இருந்தது. அதை படத்தின் சுவாரஸ்யத்தை கூட்ட நீக்கிவிட்டோம். பலரும் துப்பாக்கியால் லியோ சுடப்பட்டால் பார்த்திபன் உடம்பில் ஏன் தழும்பு இல்லை என்ற கேள்வி வருகிறது. தனது அடையாளத்தை மறைத்த லியோவுக்கு தழும்பை மறைப்பது பெரிய விஷயமா? இந்த பிளேஷ்பேன் உண்மையா பொய்யா என்ற சஸ்பென்ஸ் உடன் ரசிகர்களை வைத்திருக்க நினைத்தோம் என சொல்லியுள்ளார். 

இதனையடுத்து விஜய் ரசிகர்கள் எக்ஸ் தளத்தில் லோகேஷ் கனகராஜை (Lokesh Kanagaraj) டேக் செய்து, லியோ பார்ட் 2 வருமா? அதில் தான் லியோவுக்கு உண்மையில் நடந்தது என்ன என்பதை சொல்லுவீர்களா? என்றும் லோகேஷ் சினிமாடிக் யூனிவர்ஸில் உருவாகும் அடுத்த படத்தில் இந்த சந்தேகங்களை தெளிவு படுத்துவீர்களா என்றும் தொடர்ந்து கேள்வி கேட்டு வருகின்றனர். லோகேஷ் கனகராஜ் பேட்டி தான் இப்போது விஜய் ரசிகர்கள் மத்தியில் பேசு பொருளாக இருந்து வருகிறது.

மேலும் படிக்க | சீதா ராமன் அப்டேட்: தவறை ஒப்பு கொண்ட ராமின் தங்கைகள், மாஸ் காட்டி மகாவுக்கு ஷாக்!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News