மாஸ் வசூல் வேட்டை நடத்தும் சிவகார்த்திகேயனின் மாவீரன்.. இதுவரை எவ்வளவு வசூல்?

Maaveeran Box Office Collection Day 5 Prediction: சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மாவீரன் திரைப்படம் வசூலில் பல சாதனைகளை படைத்து வருகிறது. இப்படம் உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபிஸில் 50 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.  

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jul 18, 2023, 10:41 AM IST
  • முதல் நாள் அதிக வசூல் செய்த படங்களின் பட்டியலில் மாவீரன்.
  • இந்தியாவில் மாவீரன் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம்.
  • மாவீரன் படத்தை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
மாஸ் வசூல் வேட்டை நடத்தும் சிவகார்த்திகேயனின் மாவீரன்.. இதுவரை எவ்வளவு வசூல்? title=

சிவகார்த்திகேயன் ‘மாவீரன்’ பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷன் எவ்வளவு: மண்டேலா படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மாவீரன் என்ற படத்தில் நடித்துள்ளார், மிகப்பெரிய எதிர்பார்ப்பு மத்தியில் இந்த படம் கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. சிவகார்த்திகேயன், அதிதி சங்கர், யோகி பாபு, சுனில், மிஷ்கின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் இந்த திரைப்படத்திற்கு பரத் சங்கர் இசையமைத்துள்ளார். அத்துடன் இந்த படத்தில் விஜய் சேதுபதி பின்னணி குரல் கொடுத்துள்ளார். மேலும் இந்தப் படம் தமிழில் மாவீரன் என்ற பெயரிலும் தெலுங்கில் மஹாவீரடு என்ற பெயரிலும் வெளியாது.

மாவீரன் படம் பார்த்த ரசிகர்களின் கருத்து என்ன?

மாவீரன் படத்தை பார்த்த பல ரசிகர்கள் படம் முழுக்க சிரிப்பு வெடிகளாக உள்ளதாகவும் கொடுத்த காசுக்கு நல்ல படத்தை பார்த்த உணர்வு இருந்ததாகவும் தெரிவித்திருந்தனர். மேலும், படத்தின் முதல் பாதி போனதே தெரியவில்லை என்றும் இரண்டாம் பாதி மிகவும் நீளமாக இருந்ததாகவும் படம் கூறி வருகின்றனர். 

மேலும் படிக்க | ‘மாவீரன்’ படத்தில் குரல் கொடுக்க விஜய் சேதுபதி வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

மாவீரன் படத்தின் வசூல் நிலவரம்

35 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான மாவீரன் திரைப்படம் ரிலீஸான முதல் நாளில் 8 முதல் 10 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளது. அதேபோல் இரண்டாம் நாளில் மேலும் 10 கோடியும் வசூலித்திருந்தது மாவீரன்.  ஞாயிற்றுக்கிழமை அன்று அதாவது மூன்றாம் நாள் 12 முதல் 14 கோடி ரூபாய் வசூலித்து மாஸ் காட்டியுள்ளது. இதன்மூலம் முதல் மூன்று நாட்களில் மாவீரன் வசூல் 35 கோடி ரூபாயை எட்டிவிட்டடதாக சொல்லப்படுகிறது. 

இந்தியாவில் மாவீரன் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம்

மாவீரனின் நாள் வாரியான பாக்ஸ் ஆபிஸ் வசூல் (இந்தியா) இதோ:
முதல் நாள்: ரூ 8.1 கோடி
நாள் 2: ரூ 9.3 கோடி
நாள் 3: ரூ 10.25 கோடி
நாள் 4: ரூ 4.5 கோடி
நாள் 5: ரூ. 4.2 கோடி (முன்கூட்டிய மதிப்பீடு)

மொத்த 5 நாள் வசூல்: ரூ. 36.35 கோடி (முன்கூட்டிய மதிப்பீடு)

முதல் நாள் அதிக வசூல் செய்த படங்களின் பட்டியலில் மாவீரன்

2023 ஆம் ஆண்டு முதல் நாளில் அதிக வசூல் செய்த டாப் 5 படங்களில் தற்போது இந்தப் படமும் நுழைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பட்டியலில் நான்காவது இடத்தில் மாவீரன் உள்ளது. அதேசமயம் தனுஷின் வாத்தி 5வது இடத்தைப் பிடித்துள்ளது. அஜித்தின் துணிவு இன்னும் நம்பர் ஒன் இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. இயக்குனர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் 2 இரண்டாம் இடத்தையும், விஜய்யின் வரிசு 3வது இடத்தையும் பிடித்துள்ளது.

இந்த நிலையில் மாவீரன் படத்திற்கு கிடைத்து வரும் வரவேற்பை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும் கூடிய விரைவில் இந்த படம் 100 கோடி கிளப்பில் சேரும் என எதிர்பார்க்கின்றனர். அப்படி நடந்தால் சிவகார்த்திகேயனின் மூன்றாவது படமாக இந்த படம் இருக்கும்.

மேலும் படிக்க | ‘கேப்டன் மில்லர்’ படத்தின் முக்கிய அறிவிப்பு..! சம்பவம் செய்ய காத்திருக்கும் படக்குழு..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள். முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும். கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: https://bit.ly/3AIMb22 Apple Link: https://apple.co/3yEataJ

Trending News