சென்னையில் நடிகை மமிதா பைஜுவை நசுக்கித்தள்ளிய ரசிகர்கள்! வைரல் வீடியோ..

Actress Mamitha Baiju Viral Video : பிரபல மலையாள நடிகை மமிதா பைஜூ, சென்னைக்கு வந்திருந்தார். அப்போது, ரசிகர்கள் அவரை நசுக்கித்தள்ளிய வீடியாே இணையத்தில் வைரலாகி வருகிறது.     

Written by - Yuvashree | Last Updated : Jun 3, 2024, 03:10 PM IST
  • சென்னைக்கு வந்த மமிதா
  • நசுக்கித்தள்ளிய ரசிகர்கள்
  • வைரல் வீடியோ!
சென்னையில் நடிகை மமிதா பைஜுவை நசுக்கித்தள்ளிய ரசிகர்கள்! வைரல் வீடியோ.. title=

Actress Mamitha Baiju Viral Video : மலையாள திரையுலகில் தற்போது வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர், மமிதா பைஜு. சமீபத்தில் வெளியான பிரேமலு படம் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானார். இவருக்கு தமிழ் திரையுலகிலும் அதிக ரசிகர்கள் உண்டு.

மமிதா பைஜூ:

22 வயதே ஆன இளம், உள்ளம் கவர் நடிகை மமிதா பைஜூ. சமீபத்தில் வெளியான பிரமலு படத்தில் ரீனு எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். வித்தியாசமான இவரது கதாபாத்திரத் தேர்வும், துரு துரு நடிப்பும் பலரை கவர்ந்தது. இவர் தமிழிலும் ஜிவி பிரகாஷ் உடன் இணைந்து ரெபெல் எனும் படத்தில் நடித்திருக்கிறார். 16 வயதில் இருந்தே திரையுலகில் நடித்து வரும் அவர், இப்போது வளர்ந்து வரும் நடிகையாக மாறி இருக்கிறார். பிரேமலு படம் மூலம் இவருக்கு கேரளாவில் மட்டுமல்ல தமிழ்நாட்டிலும் அத்தனை ரசிகர்கள் தோன்றினர். 

சென்னைக்கு வந்த மமிதா:

நடிகை மமிதா, சமீபத்தில் சென்னைக்கு வந்திருந்தார். இங்கிருக்கும் பிரபல மால் ஆன, வி ஆர் மாலில் ஒரு நகைக்கடை திறப்பிற்காக வந்திருந்தார். அப்போது அங்கு கூடியிருந்த ரசிகர்கள் அவரைப் பார்ப்பதற்காகவும், அவர் அருகில் செல்வதற்காகவும், முண்டி எடுத்துக்கொண்டு நின்றனர். பாடி கார்ட்ஸ் இடையே கூடியிருந்த கூட்டத்தை பார்த்து மிகவும் அச்சத்துடன் நடந்து சென்ற மமிதா, ஒரு வழியாக கூட்ட நெரிசலில் இருந்து நகை கடைக்குள் சென்றார். அதேபோல நகைக்கடையை திறந்து வைத்துவிட்டு வெளியேறிய போதும் அதே கூட்டம் அவரை காண்பதற்காக வெளியில் நின்று கொண்டிருந்தது. அவரைச் சுற்றி அருகில் பாதுகாப்பதற்காக யாரும் நிற்கவில்லை என்றால், என்னவாகி இருப்பார் என்பது தெரிந்திருக்காது. 

மேலும் படிக்க | ‘பிரேமலு’ நாயகி மமிதா நடிக்கும் புதிய தமிழ் படம்! ஹீரோ யார் தெரியுமா?

வைரல் வீடியோ: 

மமிதாவின் இந்த வைரல் வீடியோ தற்போது இணைதளங்களில் வைரலாகி வருகின்றன. 

பலரும் சென்னை ரசிகர்களுக்கு கண்டன குரல்களை எழுப்பி வருகின்றனர். 

கோலிவுட்டில் நடிக்கும் மமிதா:

தமிழ் திரையுலக இயக்குனர்களாலும் தயாரிப்பாளர்களும் தற்போது அதிகம் தேடப்படும் நடிகையாக இருக்கிறார் மமிதா. ரெபெல் திரைப்படம் பெரிதாக ஓடவில்லை என்றாலும் இவர் நடிப்பிற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருந்தது. இதற்கு முன்னர் அவர் நடித்திருந்த படம் வணங்கான். பாலா இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தவர் சூர்யா. இவர், இப்படத்திலிருந்து விலகியதை தொடர்ந்து மமிதாவும் சில நாட்களுக்கு பிறகு வெளியேறினார். இதைத் தொடர்ந்து அவர் தனது இரண்டாவது தமிழ் படத்திலும் சைன் செய்து இருக்கிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக லவ் டுடே புகழ் பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறார். 

இந்த படத்தை எடுத்து அவர் நடிகர் அதர்வாவுடன் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. நயன்தாரா, அசின், நஸ்ரியா, அமலாபால் போல இவரும் தமிழ் திரையுலகில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | விழா மேடையில் நடிகை அஞ்சலியை தள்ளிவிட்ட பிரபல நடிகர்! வைரல் வீடியோ..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News