நீண்ட காத்திருப்புக்கு பிறகு வந்தது - தேசிய விருது வென்ற ஜிவி பிரகாஷ் உருக்கம்

நீண்ட காத்திருப்புக்கு பிறகு அந்த நாள் வந்திருப்பதாக தேசிய விருது வென்ற இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் உருக்கத்துடன்  தெரிவித்துள்ளார்.

Written by - க. விக்ரம் | Last Updated : Jul 22, 2022, 05:30 PM IST
  • 68ஆவது தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன
  • சிறந்த நடிகராக சூர்யா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்
  • சிறந்த பின்னணி இசைக்கு ஜிவி பிரகாஷுக்கு விருது
 நீண்ட காத்திருப்புக்கு பிறகு வந்தது - தேசிய விருது வென்ற ஜிவி பிரகாஷ் உருக்கம் title=

2020ஆம் ஆண்டு வெளியான படங்களுக்கான தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. இதில் சிறந்த படமாக சூரரைப் போற்று, சிறந்த நடிகராக சூர்யா, சிறந்த நடிகையாக அபர்ணா பாலமுரளி, சிறந்த திரைக்கதை எழுத்துக்காக சுதா கொங்கரா, சிறந்த பின்னணி இசையமைப்பாளராஜ ஜிவி பிரகாஷ் என சூரறைப் போற்று படம் தேசிய விருதுகளை அள்ளியுள்ளது. இதனையடுத்து படக்குழுவினருக்கு பலரும் தங்களது பாராட்டை தெரிவித்துவருகின்றனர்.

சூரறைப் போற்று படம் மட்டுமின்றி, ஸ்பெஷல் ஜூரி விருதுக்கு வசந்த் இயக்கிய சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் தேர்வாகியுள்ளது. அதேபோல் சிறந்த துணை நடிகைக்கான விருதை அந்தப் படத்தில் நடித்த லட்சுமியும், சிறந்த படத்தொகுப்பாளருக்கான விருதை அந்தப் படத்தை எடிட் செய்த ஸ்ரீகர் பிரசாத்தும் பெறுகின்றனர். மேலும் சிறந்த வசனத்துக்கான விருதை மண்டேலா பட இயக்குநர் மடோன் அஷ்வின் பெறுகிறார்.

மேலும் படிக்க  | ஜெயிச்சிட்டோம் மாறா - தேசிய விருது வென்றார் சூர்யா

இந்நிலையில் சிறந்த பின்னணி இசையமைப்பாளருக்கான தேசிய விருது வென்ற ஜிவி பிரகாஷ் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ஒரு நாள் நீ வெற்றி பெறுவாய் ஒரு நாள் நீ நினைத்தபடி எல்லாம் நடக்கும் நீண்ட காத்திருப்புக்கு பிறகு அந்த நாள் வந்து சேரும்.

இந்த பிரபஞ்சத்திற்கு நன்றி. எனது தந்தை, தாய், மனைவி, குழந்தைகள் என அனைவருக்கும் நன்றி. சூரறைப் போற்று படக்குழுவுக்கு மிகப்பெரிய நன்றி. இந்த நாள் எனது வாழ்க்கையில் மிகவும் முக்கியமான நாள்” என குறிப்பிட்டுள்ளார்.

 

இதனையடுத்து ஜிவி பிரகாஷுக்கு எப்போதோ தேசிய விருது கிடைத்திருக்க வேண்டும். இப்போதாவது கிடைத்திருக்கிறதே. இந்த விருதுக்கு அவர் எப்போதும் தகுதியானவர் என நெட்டிசன்களும் தங்களது வாழ்த்தை ஜிவிக்கு தெரிவித்துவருகின்றனர். 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News