காலத்தால் அழியாத பாரதிராஜாவின் 5 காவியங்கள்! மிஸ் பண்ணாம ஓடிடியில் பாருங்க..

Must Watch Films Of Bharathiraja : தமிழ் திரையுலகின் பழம்பெரும் இயக்குநரும் நடிகருமான பாரதி ராஜாவுக்கு இன்று பிறந்தநாள். இதையொட்டி கண்டிப்பாக பார்க்க வேண்டிய அவரது 5 படங்கள் குறித்து பார்ப்போம்.   

Written by - Yuvashree | Last Updated : Jul 17, 2024, 10:58 AM IST
  • பாரதிராஜாவுக்கு 83வது பிறந்தநாள்
  • காலத்தால் அழியாத காவியங்களை உருவாக்கியவர்
  • கண்டிப்பாக பார்க்க வேண்டிய 5 படங்கள்
காலத்தால் அழியாத பாரதிராஜாவின் 5 காவியங்கள்! மிஸ் பண்ணாம ஓடிடியில் பாருங்க.. title=

Must Watch Films Of Bharathiraja : இசையுலகிற்கு ஒரு இளையராஜா என்றால், தமிழ் திரையுலகிற்கு ஓரே ஒரு பாரதி ராஜாதான்! கோலிவுட் திரையுலகு மெருகேற, அதில் இப்போது வளர்ந்து நிற்கும் நடிகர்களின் ஆரம்ப புள்ளியாக இருந்தவர் பாரதி ராஜா. இந்திய திரையுலகின் முக்கியமான இயக்குநர்களுள் ஒருவராக விளங்கும் இவர்,  வாங்கிய விருதுகளும், கொள்ளை கொண்ட மனங்களும் ஏராளம். இவரது படங்களில் என்ன ஸ்பெஷல் என்றால், எந்த விதமான கொடுமையான அல்லது சிக்கலான உணர்ச்சிகளாக இருந்தாலும் அதனை அவ்வளவு அழகாக கூறி, அனைவரையும அழ வைப்பார். இத்தகு திறமை வாய்ந்த இவருக்கு, இன்று (ஜூலை 17ஆம் தேதி) 83வது பிறந்தநாள். இந்த நாளில், அவரது வியத்தகு படங்கள் குறித்தும், அவை வெற்றிபெற என்ன காரணம் என்பது குறித்தும் இங்கு பார்க்கலாம். 

16 வயதினிலே :

1977ஆம் ஆண்டு வெளியான படம், 16 வயதினிலே. ஸ்ரீதேவி, கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்திற்கு பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திக்கொடுத்த படம் இது. கிராமத்தில் வாழும் 16 வயது இளம் பெண் மயில், அவள் மீது ஒருதலையாக காதல் கொண்டிருக்கும் சப்பை, வில்லனாக வரும் பரட்டை, இதற்கிடையில் மயிலின் காதலனாக வரும் அந்த ஊர் டாக்டர். இவர்களை வைத்து சுழலும் கதைதான் 16 வயதினிலே. கிராமத்து அழகையும், அதில் வாழும் ஒரு பெண்ணின் போராட்டத்தையும் காண்பித்த இப்படம், இன்றும் பல புது படங்களுக்கு நல்ல கதைக்கான முன்னுதாரணமாக திகழ்கிறது. இதை யூடியூபில் இலவசமாக பார்க்கலாம். 

சிகப்பு ரோஜாக்கள்:

தமிழில் இன்று வரை வெளிவந்த சூப்பர் ஹிட் க்ரைம்-சைக்கோ கில்லர் திரைப்படங்களுள் ஒன்று, சிகப்பு ரோஜாக்கள். இந்த படத்தில் கமல்ஹாசன் மற்றும் ஸ்ரீதேவி ஜோடியாக நடித்திருப்பர். சிறுவயதில் பெண்களால் பாதிக்கப்படும் கமல், பெண்களை காதல் வலையில் விழ வைத்து கொல்கிறான். இவனிடம் சிக்கும் நாயகி தப்பித்தாளா இல்லையா என்பதுதான் மீதி படம். அந்த காலத்திலேயே இப்படியொரு டார்க்கான கதையை எடுத்து சூப்பர் ஹிட் ஆக்க்யவர் பாரதிராஜா. இதை ஆஹா தளத்தில் இலவசமாக பார்க்கலாம்.

முதல் மரியாதை:

இந்த படத்தை ஒரு முறையாவது தொலைக்காட்சியில் பார்த்திராத 90s மற்றும் 2K கிட்ஸ் இருக்க மாட்டோம். ஊர் பெரியவராக வலம் வரும் ஒருவர். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியின்றி இருக்கும் இவரது வாழ்வில், ஒளியாக வருகிறாள் குயில். இவர்களுக்கிடையே தொட்டும்-தொடாத காதல். குடும்பத்தின் பிணைப்பு, காதலின் ஆழம் என அனைத்தையும் கூறிய இந்த படத்திற்கு வயது 39 வயது. இந்த படமும், திரையரங்குகளில் அதிக நாட்கள் ஓடிய பாரதிராஜாக்களின் படங்களுள் ஒன்றாகும். இதை அமேசான் பிரைம் தளத்தில் பார்க்கலாம். 

மேலும் படிக்க | “சினிமாக்காரர்களின் வீடு என்ன திறந்த மடமா?” ஊடகங்கள் மீது பாரதிராஜா காட்டம்..!

Bharathiraja Movies

அலைகள் ஓய்வதில்லை:

கமல்ஹாசன், ஸ்ரீதேவி, ரஜினிகாந்த் போன்ற ஹிட் ஹீரோக்களை வைத்து மட்டும்தான் படத்தை வெற்றி பெற செய்ய முடியுமா என்ன? புது நடிகர்களை வைத்தும் அதை செய்து காட்டுகிறேன் பாருங்கள் என்று புது முகங்களான கார்த்திக் மற்றும் ராதாவை அறிமுகப்படுத்தி பாரதிராஜா இயக்கிய படம் அலைகள் ஓய்வதில்லை. வெவ்வேறு மதங்களை சேர்ந்த இருவர், தடைகளை கடந்து காதலில் வெற்றி பெற்றனரா இல்லையா என்பதுதான் இந்த படத்தின் கதை. 80களில் பெரிய ஹிட் அடித்த படங்களில் இதுவும் ஒன்று. இப்படத்திற்கு பிறகு கார்த்திக் மற்றும் ராதாவின் மார்கெட் நல்ல ஏற்றம் கண்டது. இதை அமேசான் பிரைம் தளத்தில் பார்க்கலாம்.

பசும்பொன்:

பிரபு, சிவாஜி கணேசன், சரண்யா பொன்வண்ணன், சிவகுமார் உள்ளிட்டோர் நடித்திருந்த படம், பசும்பொன். இந்த படத்தில் சமூக பிரச்சனைகளையும் சமூக கட்டமைப்புகளால் ஒருவர் படும் அவலங்களையும் அப்படியே அழகாக எடுத்து காண்பித்திருப்பார் பாரதிராஜா. 1995ஆம் ஆண்டு வெளியான இந்த படம், அந்த ஆண்டில் பெரும் ஹிட் அடித்த படங்களுள் ஒன்றாக இருந்தது. அமேசான் பிரைம் தளத்தில் இப்படத்தை பார்க்கலாம். 

மேலும் படிக்க | 31 ஆண்டுகளுக்கு பின் இணையும் இயக்குநர் இமயம் பாரதிராஜா-இசைஞானி இளையராஜா

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News