பொம்மி கையில பச்ச குத்தலையே? சந்தேகப்படும் சித்தார்த்! சாட்சி சொன்னது பேயா?

Ninaithale Inikkum Latest Episode: குற்றவாளி கூண்டில் சித்தார்த்.. கோர்ட்டுக்குள் என்ட்ரி கொடுத்த பொம்மி, நடக்க போவது என்ன? நினைத்தாலே இனிக்கும் சீரியல் அப்டேட்

Written by - Malathi Tamilselvan | Last Updated : May 16, 2023, 10:50 AM IST
  • குற்றவாளி கூண்டில் சித்தார்த்
  • கோர்ட்டுக்குள் என்ட்ரி கொடுத்த பொம்மி
  • நடக்க போவது என்ன? நினைத்தாலே இனிக்கும் சீரியல் அப்டேட்
பொம்மி கையில பச்ச குத்தலையே? சந்தேகப்படும் சித்தார்த்! சாட்சி சொன்னது பேயா? title=

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி பிரபலமான சீரியல் நினைத்தாலே இனிக்கும். இந்த சீரியல் கடந்த வாரம் வில்லியனில் சூழ்ச்சியால் பொம்மி கொல்லப்பட்ட நிலையில் இந்த வாரம் இந்த சீரியல் நடக்கப்போவது என்ன என்பது குறித்து தெரிய வந்துள்ளது. 

பொம்மியை சித்தார்த் தான் கொலை செய்ததாக அவனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த சித்தார்த்தும் நான் தான் பொம்மியை கொன்னுட்டேன் என்று புலம்ப கோர்ட் சித்தார்த் தான் கொலைகாரன் என தீர்ப்பு கொடுக்கும் நிலையில் நீதிமன்றத்தில் பொம்மி என்ட்ரி கொடுக்கிறாள். பொம்மியாக வந்தது யார்? 

இதனால் அனைவரும் அதிர்ச்சி அடைய நான் சாகல, என்னை கடத்தி ஒரு இடத்துல கட்டி வச்சிருந்தாங்க, அங்கிருந்து தப்பி வந்தேன் என சொல்ல அப்போ கொலையான பெண் யார் என்பதை விசாரித்து அதற்கான தகவல்களை சமர்ப்பிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவு பிறப்பித்து சித்தார்த்தை ஜாமினில் வெளியிடுகிறார். 

மேலும் படிக்க | பஞ்சாயத்தில் அவமானப்பட்ட ரங்கநாயகி..அடுத்தது என்ன?மீனாட்சி பொண்ணுங்க அப்டேட்

வெளியே வந்த சித்தார்த் பொம்மியின் கையில் சித்தாத் என்ற பச்சை இல்லாமல் இருக்க இது பொம்மி இல்லை என சந்தேகப்பட்டு தாத்தாவிடம் சொல்ல அவர் பொம்மி கையை பாரு பச்ச குத்தி இருக்கு என்று சொல்ல அப்போது கையில் பச்சை இருக்கின்றது.  ‌

அதன் பிறகு சித்தார்த் இது பொம்மி தான் என கட்டிப்பிடித்து சந்தோஷப்படுகிறான். ஆனால், அது நடிகை என்று தெரிய வந்தால் சித்தார் என்ன செய்வான்????

அதன் பிறகு பொம்மியாக வந்த பெண் லோக்கல் ஏரியாவை சேர்ந்தவள், அது தாத்தா வேத நாயகத்தின் ஏற்பாடு என தெரிய வருகிறது. அந்தப் பெண் இனிமேலும் இங்கே இருக்க முடியாது என கிளம்ப முயற்சி செய்ய தாத்தா சமாதானம் செய்து இருக்க வைக்கிறார். 

பிறகு அந்த பெண்ணை சுற்றி வீட்டில் ஏதேதோ அமானுஷங்கள் நடக்கிறது. இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்ற கோணத்தில் சீரியல் கதைக்களம் நகர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

எனவே நினைத்தாலே இனிக்கும் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினம் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது நினைத்தாலே இனிக்கும் மெகாத் தொடர்.

மேலும் படிக்க | நினைத்தாலே இனிக்கும் தொடரில் சூப்பர் ட்விஸ்ட்! இனி பேயாக வருகிறாளா பொம்மி? 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News