நினைத்தாலே இனிக்கும் தொடரில் சூப்பர் ட்விஸ்ட்! இனி பேயாக வருகிறாளா பொம்மி?

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினம் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தாலே இனிக்கும்.  

Written by - Yuvashree | Last Updated : May 13, 2023, 12:23 PM IST
  • நினைத்தாலே இனிக்கும் தொடரில் கதையின் நாயகி பொம்மி இறந்து போவது போன்ற ப்ரமோ வெளியானது.
  • பொம்மி, இனி பேயாக வருவாள் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
நினைத்தாலே இனிக்கும் தொடரில் சூப்பர் ட்விஸ்ட்! இனி பேயாக வருகிறாளா பொம்மி?  title=

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பிரபலமான சீரியல்களுள் ஒன்று, நினைத்தாலே இனிக்கும். இதில், இனிப்பு விற்கும் தொழிலாளியாக இன்ட்ரோவான கதையின் நாயகி பொம்மி, காலப்பாேக்கில் அவர் இனிப்பு விற்ற பெரிய இடத்தில் உள்ள ஒருவரையே திருமணம் செய்து கொண்டாள். அதன் பிறகு கதையில் யாரும் எதிர்பார்க்காத பல திருப்பங்கள் உண்டாகின.  ஸ்வாதி ஷர்மா நாயகியாக நடிக்க ஆனந்த் செல்வன் நாயகனாக நடித்து வரும் இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

முந்தைய எபிசோட்..

நினைத்தாலே இனிக்கும் தொடரின் ஹீரோ சித்து திருணம் செய்து கொண்ட பிறகும் பொம்மியை பல நாட்களாக ஏற்றுக்கொள்ளாமல் இருந்தான். இதையடுத்து, பொம்மியை ஏற்றுக்கொண்டு ஒன்றாக சேர்ந்து வாழலாம் என முடிவெடுத்த நிலையில், பொம்மியின் உயிருக்கு ஆபத்து என்ற செய்தி வருகிறது. வரும் சித்ரா பௌர்ணமி அன்று பொம்மி இறந்து விடுவாள் என ஒரு நம்பூதரி கூறிய நிலையில் அதற்கேற்றாற் போல வில்லிகள் ஒன்று சேர்ந்து பொம்மியை கொடூரமாக கொல்லும் ப்ரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்தது. 

மேலும் படிக்க | பஞ்சாயத்தில் அவமானப்பட்ட ரங்கநாயகி..அடுத்தது என்ன?மீனாட்சி பொண்ணுங்க அப்டேட்

இனி நடக்கவிருப்பது..

பொம்மியின் இறப்பு ப்ரமோவிற்கு பிறகு, நினைத்தாலே இனிக்கும் தொடர் முடிவுக்கு வருகிறதா என்ற கேள்வி ரசிகர்களின் மனங்களில் எழுந்தது.  இதையடுத்து இப்படியான நிலையில் இது குறித்து செம சூப்பரான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இந்த சீரியல் முடிவுக்கு வர போவதில்லை, இதன் பிறகு தான் சீரியலின் அதிரடி திருப்பங்கள் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

பேயாக பொம்மி? 

தற்போது நினைத்தாலே இனிக்கும் சீரியல் கதை குறித்த எக்ஸ்களூசிவ் தகவல்கள் சில வெளியாகியுள்ளன. அந்த தகவல்களின் படி, இறந்து பாேன கதையின் நாயகி பொம்மி ஆவியாக வந்து அனைவரையும் பழிவாங்கும் படி கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அவளை கொன்றவர்களை பழிவாங்கும் சில காட்சிகளும் இந்த தொடரில் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

ரசிகர்களுக்கு ஷாக்!

நினைத்தாலே இனிக்கும் தொடரின் மொத்த கதைக்களமும் மேற்கூறிய விஷயத்தால் மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. விறுவிறுப்பான ட்விஸ்டுகளுடன் ஒளிபரப்பாக உள்ள இந்த தொடர், ரசிகர்களை கண்டிப்பாக ஈர்க்கும் என கூறப்படுகிறது. “இனிதான் ஆட்டம் ஆரம்பம்..” என்று சீரியல் குழு தரப்பில் இருந்து வெளியாகியுள்ள தகவல் பலருக்கும் இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இதையடுத்து ரசிகர்கள் பலரும், “இப்படியொரு ட்விஸ்ட்டை எதிர்பார்க்கல” எனகமெண்ட் அடித்து வருகின்றனர்.

காணத்தவராதீர்கள்..

விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் ஒளிபரப்பாகி வரும் நினைத்தாலே இனிக்கும் தொடரை, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 10 மணிக்கு காணத்தவறாதீர்கள். 

மேலும் படிக்க | Keerthy Suresh: மாடர்ன் ரதி டூ மங்கள மங்கை..கீர்த்தி சுரேஷின் அசத்தல் க்ளிக்ஸ் இதோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News