பாக்., பாடகி ரேஷ்மா-க்கு கணவன் கையால் நேர்ந்த கொடூரம்!

பாகிஸ்தான் நடிகையும், பாடகியுமான ரேஷ்மா அவரது கணவனால் சுட்டுக் கொலை செய்யபட்டார்! 

ZEE Web Team (Tamil) ZEE Web Team (தமிழ்) | Updated: Aug 9, 2018, 01:34 PM IST
பாக்., பாடகி ரேஷ்மா-க்கு கணவன் கையால் நேர்ந்த கொடூரம்!
Image Courtesy: Twitter

பாகிஸ்தான் நடிகையும், பாடகியுமான ரேஷ்மா அவரது கணவனால் சுட்டுக் கொலை செய்யபட்டார்! 

பாகிஸ்தான் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் உள்ள நவ்ஷேரா கலன் பகுதியில் ரேஷ்மா வசித்து வந்தார். ரேஷ்மா-வுக்கும் அவரது கணவருக்கு வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர்.  

இந்த வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த அவரது கணவர் தனது கையில் வைத்திருந்த துப்பாக்கியால் ரேஷ்மாவை சுட்டுக் கொன்று விட்டு கணவன் தப்பி விட்டதாகவும், ரேஷ்மா இவருக்கு நான்காவது மனைவி என்றும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. 

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாகிஸ்தானில் ஓராண்டில் மட்டும் பெண் கலைஞர்களுக்கு எதிராக வன்முறை இழைக்கப்படுவது இது 15 வது முறையாகும்.