தயாரிப்பாளர் சங்கத்தை தொடர்ந்து நடிகர் சங்கத்திலும் நடிகர் விஷாலுக்கு எதிர்ப்புகள் வருகிறது. நடிகர் சங்கத்தின் துணை தலைவராக இருக்கும் நடிகர் பொன்வண்ணன், தனது பதவியிலிருந்து ராஜினாமா செய்வதாக கடிதம் கொடுத்துள்ளார்.
தனிப்பட்ட காரணங்களுக்காக தான் ராஜினாமா செய்வதாக அவர் தெரிவித்துள்ளார். கடந்த வாரமே அவர் கடிதம் கொடுத்ததாக தெரிவித்துள்ளார். ஆனால் அவரின் ராஜினாமாவை நிர்வாகிகள் இன்னும் ஏற்கவில்லை. தொடர்ந்து அவரிடம் பேசி வருகின்றனர்.
இந்நிலையில், விஷால் சமீபத்தில் ஆர்கே.நகர் இடைத்தேர்தலிலும் களமிறங்கினார். அவர் வேட்புமனு நிராகரிக்கப்பட்டாலும், சங்கத்தில் அவரது செயல் பிடிக்கவில்லை. இதனால் சங்க நலன் பாதிக்கப்படும் என நிர்வாகிகள் கருதுகின்றனர். இதன்காரணமாக பொன்வண்ணன் ராஜினாமா செய்வதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பேசிய நடிகர் பொன்வண்ணன், சொந்த காரணங்களுக்காக விலகியதாக விளக்கம் அளித்துள்ளார்.