பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம், மிகவும் எதிர்பார்ப்பில் உள்ள திரைப்படங்களில் ஒன்றாகும். கல்கி எழுதிய நாவலை தழுவி எடுக்கப்பட்ட இப்படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது. இப்படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரமும், வல்லவராயன் வந்தியத்தேவனாக கார்த்தியும், குந்தவையாக திரிஷாவும், நந்தினி தேவியாக ஐஸ்வர்யா ராய் பச்சனும், அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவியும் நடித்து உள்ளனர். மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். மேலும் இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் நாளை திரைக்கு வர உள்ளது.
பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பு அதிக அளவில் உள்ளது. இதனிடையே இந்த திரைப்படம் '4DX' வடிவத்திலும் வெளியிடப்படும் என்று தயாரிப்பாளர்கள் சமீபத்தில் அறிவித்தனர். மேலும் பொன்னியின் செல்வன் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் திரைக்கு வர உள்ளது.
மேலும் படிக்க | ஏன் இஸ்லாமிய பெண்களை மட்டும் இப்படி காட்ட வேண்டும்? கொதிக்கும் தடா ரஹீம்!
இந்த நிலையில் இப்படத்திற்கான புரமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது பொன்னியின் செல்வன் 2 படத்தின் முதல் இரண்டு நாள் புக்கிங் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் முதல் வாரத்திற்கான டிக்கெட் புக்கிங்கில் தமிழகத்தில் மட்டும் இதுவரை 6 கோடி வரை கலெக்ஷன் ஆகி இருக்கிறது. அதேபோல் உலகில் மற்ற பகுதிகளிலும் பொன்னியின் செல்வன் படத்திற்கான அட்வான்ஸ் புக்கிங் மளமளவென விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இந்த முறை பொன்னியின் செல்வன் படத்தை தயாரித்த லைக்கா நிறுவனமே உலகம் முழுவதும் நேரடியாக திரையிடுகிறது.
அதன்படி உலகம் முழுவதும் அட்வான்ஸ் புக்கிங் மூலம் 11 கோடி வரை வசூலித்துள்ளது. இதன் மூலம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கான மொத்த அட்வான்ஸ் புக்கிங் மட்டும் 17 கோடி வசூல் ஆகியுள்ளது. மேலும் இரண்டாம் பாகத்தில் 1000 கோடியை தட்டி தூக்கி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ