பொன்னியின் செல்வன் ரியாக்ஷன்; மாஸ்டர் ஸ்டைலில் ஏ.ஆர்.ரகுமான் ஆடும் டான்ஸ் வீடியோ வைரல்

பொன்னியின் செல்வன் படத்துக்கு அமோக வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், ஏஆர் ரகுமான் மாஸ்டர் படத்தின் ஸ்டைலில் டான்ஸ் ஆடும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 

Written by - S.Karthikeyan | Last Updated : Sep 30, 2022, 11:51 AM IST
  • பொன்னியின் செல்வன் படத்தின் ரியாக்ஷன்
  • ஏஆர் ரகுமான் டான்ஸ் ஆடும் வீடியோ வைரல்
  • மணிரத்னத்துக்கு குவியும் பாராட்டு
பொன்னியின் செல்வன் ரியாக்ஷன்; மாஸ்டர் ஸ்டைலில் ஏ.ஆர்.ரகுமான் ஆடும் டான்ஸ் வீடியோ வைரல் title=

மணிரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் திரைப்படம் இன்று வெளியானது. அதிகாலை முதல் காட்சியை பார்த்த கையோடு ரியாக்ஷனை பதிவிட்டு வரும் ரசிகர்கள், பொன்னியின் செல்வன் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருப்பதாக தெரிவித்துள்ளனர். நாவலில் வரும் பிரம்மாண்டத்தை எந்த விதத்திலும் கெடுக்காமல், அந்த கற்பனையை அப்படியே மணி ரத்னம் காட்சிப்படுத்தியிருப்பதாக புகழாரம் சூட்டியுள்ளனர். கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய் மற்றும் திரிஷா உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்களும் சூப்பராக நடித்து ரசிகர்களின் அபிமானத்தைப் பெற்றுள்ளனர்.

முதல் பாகம் நல்ல வரவேற்பை பெற்றிக்கும் நிலையில், 2ஆம் பாகத்தின் கிளைமாக்ஸ் காட்சியை ஆவலோடு எதிர்நோக்கியிருப்பதாக தெரிவித்துள்ளனர். ஏஆர் ரகுமானின் இசை மற்றும் பின்னணி இசை வியக்க வைப்பதாக தெரிவித்துள்ள ரசிகர்கள், அவரின் உழைப்பை வெகுவாக பாராட்டியுள்ளனர். இசை மூலம் படத்தின் பிரம்மாண்டத்துக்கு அவர் மெருகூட்டியிருப்பதாகவும் கூறியுள்ளனர். இந்நிலையில், விஜய் முகத்தில் ஏ.ஆர்.ரகுமானின் முகத்தை வைத்து எடிட்டிங் செய்யப்பட்ட வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. மாஸ்டர் படத்தில் விஜய் ஆடும் ஓபனிங் சாங்கை எடிட் செய்திருக்கும் நெட்டிசன், அதில் ஏ.ஆர்.ரகுமான், கார்த்தி விக்ரம், மணிரத்னம் மற்றும் திரிஷா, ஐஸ்வர்யா ராய் ஆகியோர் பொன்னிநதி பாடலுக்கு ஆடுவதுபோல் வீடியோவை உருவாக்கியிருக்கிறார்.

மேலும் படிக்க | PS1 Review: ’சோழனுக்கு எப்போதும் தோல்வியே இல்லை’ பொன்னியின் செல்வனை கொண்டாடும் ரசிகர்கள்

பொன்னியின் செல்வனுக்கு பாசிட்டிவான விமர்சனம் கிடைத்திருக்கும் இந்த நேரத்தில் ஏஆர் ராகுமான் நடனம் ஆடும் இந்த வீடியோவும் கவனத்தை பெற்று ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. வெற்றி கொண்டாட்டத்துக்கு ஏற்ப ரகுமானின் நடனம் இருப்பதால், வீடியோவை லைக் செய்து ஷேர் செய்து வருகின்றனர். இதனிடையே காலை வெளியான பொன்னியின் செல்வன் படத்தை விக்ரம், ஜெயரம் ரவி மற்றும் திரிஷா ஆகியோர் ரசிகர்களுடன் அமர்ந்து ரசித்தனர். உலகம் முழுவதும் இருந்து பொன்னியின் செல்வன் படத்துக்கு நல்ல விமர்சனங்களே வந்து கொண்டிருப்பதால், வசூலிலும் வாகை சூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் படிக்க | பொன்னியின் செல்வன் கதாபாத்திரப் பிணைப்பு: 360 டிகிரி பார்வை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News