அடேங்கப்பா! இருமடங்காக உயர்ந்த பிரதீப் ரங்கநாதன் சம்பளம்!

லவ் டுடே படத்துக்காக 1 கோடியே 50 லட்சம் ரூபாய் சம்பளமாக பெற்றதாகவும், தற்போது தனது அடுத்த படத்துக்கு மூன்று மடங்கில் சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Written by - Bhuvaneshwari P S | Edited by - Vijaya Lakshmi | Last Updated : Jan 5, 2023, 01:44 PM IST
  • லவ் டுடே படம் மூலம் மிகப்பெரிய அளவில் ரீச்.
  • 80 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் ஆகியுள்ளது.
  • லவ் டுடே படத்துக்காக 1 கோடியே 50 லட்சம் ரூபாய் சம்பளம்.
அடேங்கப்பா! இருமடங்காக உயர்ந்த பிரதீப் ரங்கநாதன் சம்பளம்!

Pradeep Ranganathan Salary: கோமாளி படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். ஜெயம் ரவி, காஜல் அகர்வால், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்திருந்த அப்படம் 2019ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனையடுத்து பிரதீப் தானே ஹீரோவாக நடித்து ‘லவ் டுடே’ என்ற படத்தை இயக்கினார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் லவ் டுடே படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து இருந்தார். இவானா மற்றும் ரவீனா ரவி, சத்யராஜ் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடத்திருந்தனர். இப்படம் கடந்த ஆண்டு வெளியாகி பலத்த வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

இதற்கிடையில் லவ் டுடே படம் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று 100 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக கூறப்பட்டு வந்தது. அதேபோல் இந்த படம் தெலுங்கு மொழியில் மொழிமாற்றம் செய்து திரையரங்குகளில் வெளியிடப்பட்டு, தெலுங்கு ரசிகர்களிடையேயும் நல்ல வரவேற்பை பெற்றது. கிட்டத்தட்ட ரூ.7 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட இந்த ரூ.90 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து தயாரிப்பாளர்களுக்கு பெரியளவில் லாபத்தை ஈட்டி தந்தது. 

மேலும் படிக்க | Thunivu vs Varisu : துணிவுக்கு பின் வந்த வாரிசு அப்டேட்... இந்த பொங்கல் யாருக்கு ?

லவ் டுடே படம் மூலம் மிகப்பெரிய அளவில் ரீச் ஆன பிரதீப் ரங்கநாதன் தனது சம்பளத்தை இருமடங்காக உயர்த்தியுள்ளாராம். லவ் டுடே படத்துக்காக 1 கோடியே 50 லட்சம் ரூபாய் சம்பளமாக பெற்றதாகவும், தற்போது தனது அடுத்த படத்துக்கு 3 கோடி ரூபாய்யை சம்பளமாக பெற உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே ரசிகர்களின் கவனத்தையும் வெகுவாக கவர்ந்த இந்த 'லவ் டுடே' படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | அஜித்தின் துணிவு: ரிலீஸ் தேதி அறிவிப்பு, கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

More Stories

Trending News