பா.இரஞ்சித் தயாரிப்பில் "இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு" பட ட்ரைலர்

பா.இரஞ்சித் தயாரிப்பில் உருவாகி வரும் "இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு" படத்தின் ட்ரைலர் வெளியானது.

ZEE Bureau ZH Web (தமிழ்) | Updated: Aug 28, 2019, 06:35 PM IST
பா.இரஞ்சித் தயாரிப்பில் "இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு" பட ட்ரைலர்
Pic Courtesy : Youtube Grab

சென்னை: இன்று 6 மணிக்கு இயக்குநர் பா.இரஞ்சித் தயாரிப்பில் உருவாகி வரும் "இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு" படத்தின் ட்ரைலர் வெளியாகி உள்ளது. இயக்குநர் பா.இரஞ்சித் தயாரிப்பில் வெளியாகும் இரண்டாவது படம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஏற்கனவே பா.இரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான "பரியேறும் பெருமாள்" படம் பெரும் வரவேற்ப்பை பெற்றது. இந்தநிலையில், "இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு" படமும் விரைவில் வெளியாக உள்ளது. 

இந்த படத்தில் தினேஷ், ஆனந்தி, ரியாத்விகா, முனீஸ்காந்த், லிஜீஷ், ஜான் விஜய் உட்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்தினை இயக்குநர் பா.ரஞ்சித்தின் உதவியாளரான அதியன் ஆதிரை இயக்கியுள்ளார். தென்மா இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். 

இன்று "இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு" படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.