விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமணத்தில் கலந்து கொண்ட ரஜினிகாந்த்!

நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் சற்று நேரத்தில் சென்னையில் நடைபெறவுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Jun 9, 2022, 09:48 AM IST
விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமணத்தில் கலந்து கொண்ட ரஜினிகாந்த்! title=

நடிகை நயன்தாராவுக்கும், இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் இன்று ஜூன் 9-ந் தேதி திருமணம் நடைபெற உள்ளது. முதலில் திருப்பதியில் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டிருந்த அந்த ஜோடி, அங்கு அனுமதி கிடைக்காததால் சென்னை கிழக்கு கடற்கரை சாலை மகாபலிபுரத்தில் கடற்கரை ஓரம் அமைந்துள்ள தனியார் நட்சத்திர விடுதியில் திருமணம் சற்று நேரத்தில் செய்துகொள்ள உள்ளனர்.  இன்று காலை 7-30 மணி முதல் 9 மணிக்குள்ளாக நயன்தாராவும் - விக்னேஷ் சிவனும் கடற்கரையில் வைத்து திருமணம் செய்துகொள்ள நிலையில் இவர்களது திருமணத்துக்காக கண்ணாடி மாளிகை போன்ற பிரம்மாண்ட செட் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | 1 லட்சம் பேருக்கு கல்யாண விருந்தளிக்கும் நயன்தாரா-விக்னேஷ் சிவன்!

விக்கி கவுஷல் - கத்ரீனா கைஃப் மற்றும் விராட் கோலி - அனுஷ்கா சர்மா ஆகிய ஜோடிகளின் கல்யாணத்தில் பணியாற்றிய திருமண ஏற்பாட்டாளர்கள் தான் நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண வேலைகளையும் கவனித்து வருகிறார்களாம். இது தவிர பல்வேறு சர்ப்ரைஸான விஷயங்களும் இவர்களது திருமணத்தில் இடம்பெற உள்ளதாக கூறப்படுகிறது.  இந்து முறைபடி நடைபெறும் நயன்தாரா, விக்னே சிவன் திருமண வரவேற்ப்பு விழாவில் குறைந்த அளவிலான முக்கிய உறவினர்கள் நண்பர்கள் மட்டுமே பங்கேற்றனர்.  இன்று காலை நடைபெறும் திருமணத்தில் நடிகர்கள்  அமிதாபட்ஜன், ரஜினிகாந்த், விஜய், அஜித், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்ற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  திருமணத்திற்க்கு வரும் அனைவரையும் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதித்து வருகின்றனர்.  குறிப்பாக திருமண அழைப்பிதழ் வைத்திருந்தால் மட்டும் உள்ள அனுமதித்து வருகின்றனர். 

திருமணத்திற்க்கும் வருபவர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது இந்து முறைபடி நடைபெறும் திருமணம் என்பதால் ஆண்கள் வேட்டி சட்டையிலும், பெண்கள் சேலையில் பங்கேற்ற வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது திருமண மண்டபத்தை சுற்றிலும் போலீசார் பாதுகாப்பு பணியில்ல ஈடுபடௌடுள்ளனர் திருமண மண்டபத்தில் தனியார் பவுன்சர்கள் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.  விக்னேஷ் சிவன் நயன்தாரா திருமணத்தில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டார், மேலும் நயன்தாரா திருமணத்தில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்திருக்கிறார் பாலிவுட் நடிகர் ஷாருக்கான்.  இயக்குனர் மணிரத்னம் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும் படிக்க | நயன்தாராவின் Exclusive புகைப்படங்களை வெளியிட்ட விக்னேஷ் சிவன்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News