முடிந்தது சென்சார்.. தர்பார் படத்திற்கு U/A சான்றிதழ்!! ரன்னிங் டைம்?

"தர்பார்" திரைப்படத்திற்கான சென்சார் முடிந்து, படத்திற்கு U/A  சான்றிதழ் கிடைத்துள்ளது என அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 3, 2020, 09:25 PM IST
முடிந்தது சென்சார்.. தர்பார் படத்திற்கு U/A  சான்றிதழ்!! ரன்னிங் டைம்? title=

புது டெல்லி: நடிகர் ரஜினிகாந்தின் 167-வது படமாக வெளிவர உள்ள "தர்பார்" திரைப்படத்திற்கு U/A சான்றிதழ் கிடைத்துள்ளது. இந்த படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி 9 ஆம் திரைக்கு வர உள்ளது. 

சர்கார்’ படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்பார்’ படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி உள்ளார். ரஜினிகாந்தின் 167-வது படமாக உருவாகும் இந்தப் படத்தில் ரஜினிகாந்த், ஆதித்யா அருணாசலம் என்ற கதாப்பாத்திரத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இவர்களுடன் யோகி பாபு, பாலிவுட் நடிகர் பிரதீக் பப்பர் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். 

மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள தர்பார் படம் வரும் ஜனவரி மாதம் 9 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்தநிலையில், மலேஷியாவை சேர்ந்த டிஎம்ஒய் கிரியேசன்ஸ் நிறுவனம் சார்பில் இந்த படத்திற்கு தடை விதிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்து உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பை தேதியை குறிப்பிடாமல் தள்ளி வைத்தது நீதிமன்றம்.

ஏற்கனவே "தர்பார்" படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் ட்ரெய்லரை தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் ஒரே படக்குழு வெளியிட்டது. மேலும் கபாலி படத்தை போன்று விமானத்தில் தர்பார் படத்தின் போஸ்ட்டரை ஒட்டி ப்ரோமோஷன் செய்துள்ளனர் படக்குழுவினர்.

U/A certificate

"தர்பார்" படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்திருக்கும் நிலையில் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. 

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது

Trending News