Rajinikanth Pays Tribute To Vijayakanth in Chennai: விஜயகாந்த் மறைவையொட்டி மாநிலம் முழுவதும் துக்கம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் பல இடங்களில் விஜயகாந்தின் புகைப்படங்களுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தும் காட்சிகளை பார்க்கமுடிகிறது. பல இடங்களில் வியாபாரிகள் முன்வந்து கடையடைப்பை செய்துள்ளனர்.
விஜயகாந்தின் உடல் தற்போது சென்னை அண்ணா சாலையில் உள்ள தீவுத்திடலில் பொதுமக்கள் மற்றும் பிரபலங்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. சென்னை மட்டுமின்றி தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் அவருக்கு அஞ்சலி பொதுமக்கள் வருகை தந்துள்ளனர். ரசிகர்கள், கட்சி தொண்டர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அவரை இறுதியாக காண ஆயிரக்கணக்கான மக்கள் தீவுத்திடலில் குவிந்துள்ளனர். தொடர்ந்து மக்கள் வெள்ளம் வந்துகொண்டேயிருக்கிறது. இதற்கிடையில் அரசியல் தலைவர்களும், திரை நட்சத்திரங்களும் விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், கன்னியாகுமரியில் இருந்து இப்போதுதான் வந்தேன், நேற்று வர வேண்டியதாக இருந்தது. மிகவும் துக்கமாக இருக்கிறது. நட்பிற்கு இலக்கணம் விஜயகாந்த்தான். ஒருமுறை பழகிட்டா அவருடைய அன்புக்கு அடிமையாகிவிடுவார்கள், அதனால்தான் அத்தனை நண்பர்கள் அவருக்காக உயிரை கொடுக்கவும் தயாராக இருந்தனர்.
மேலும் படிக்க | தீவுத்திடலில் வைக்கப்பட உள்ள விஜயகாந்த் உடல்... இறுதி ஊர்வலம் எப்போது? - முழு விவரம்
நண்பர்கள், அரசியல்வாதிகள், ஊடகங்கள் அனைவரின் மேலும் கோபப்படுவார் விஜயகாந்த், ஆனால் யாரும் அவர் மீது கோபப்படமாட்டார்கள். ஏனென்றால், அந்த கோபத்தில் நியாயமான காரணம் இருக்கும், சுயநலம் இருக்காது, அன்பு இருக்கும். அவர் தைரியத்திற்கும், வீரத்திற்கும் இலக்கணமானவர். பலருக்கும் அவருடன் பல அனுபவங்கள் இருக்கும்.
ஒருமுறை, நான் ராமசந்திரா மருத்துவமனையில் நான் உடல்நலக்குறைவோடு சுயநினைவு இன்றி அனுமதிக்கப்பட்டிருந்தபோது மக்கள் கூட்டம், ரசிகர்கள் கூட்டம் மருத்துவமனையில் அதிகம் இருந்தது. அப்போது அங்கு வந்த விஜயகாந்த் 5 நிமிஷத்திலேயே என்ன செய்தார் என தெரியாது, ஆனால் அத்தனை கூட்டத்தையும் ஒழுங்குப்படுத்தி உள்ளார். மேலும், எனது அறைக்கு பக்கத்திலேயே ரூம் போட சொல்லி பாதுகாப்புக்கு இருக்கிறேன் என கூறியுள்ளார். இதனை மறக்கவே முடியாது.
அதேமாதிரி ஒருமுறை, சிங்கப்பூர், மலேசியா நடிகர் சங்க நிகழ்ச்சிக்காக போயிருந்தோம். அப்போது நிகழ்ச்சிக்கு பின் அனைவரும் பேருந்தில் ஏறிவிட்டனர். நான் ஏறவில்லை, மக்கள் சூழ்ந்துவிட்டனர். பேருந்திற்கு செல்லவே முடியவில்லை. அப்போது ஒரு துண்டுடன் பேருந்தில் இருந்து இறங்கி, அங்கிருந்தவர்களை அடித்து விரட்டி ஒரு பாதையை உருவாக்கி என்னை பூப்போல் அழைத்துச்சென்று பேருந்தில் அமரவைத்தார், 'உங்களுக்கு ஒண்ணும் இல்லல' என அன்புடன் கேட்டார்.
கேப்டன் அவருக்கு பொருத்தமான பெயர். 71 பால் அவ்வளவுதான். பல பவுண்டரிகள், பல சிக்ஸர்கள் என நூற்றுக்கணக்கான ரன்களை குவித்து மக்களை மகிழ்வித்து, விக்கெட்டை இழந்துவிட்டு உலகம் என்ற மைதானத்தைவிட்டு போய்விட்டார்" என்றார். இடையில் பேசிக்கொண்டிருந்தபோது ரஜினியின் குரல் துக்கத்தில் தழுதழுத்து பார்ப்போரையும் வருந்தச்செய்தது.
மேலும் படிக்க | விஜயகாந்த் கடைசியாக நடித்த படம்..பேசிய டைலாக்..வைரலாகும் வீடியோ!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ