ரஜினியின் 2.0 திரைப்படம் பாகுபலி-2 வசூலை முந்துமா?

Last Updated : Jun 4, 2017, 11:30 AM IST
ரஜினியின் 2.0 திரைப்படம் பாகுபலி-2 வசூலை முந்துமா? title=

ரஜினி நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் ‘2.0’. ‌ஷங்கர் இயக்கி இருக்கும் இதில், அக்‌ஷய் குமார், எமிஜாக்சன் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். 

ரூ. 400 கோடி செலவில் தயாராகி வரும் இந்த படம் அடுத்து ஆண்டு ஜனவரி மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டு இருக்கிறார்கள். 

‘பாகுபலி’, படம் உலகம் முழுவதும் வசூல் சாதனை படைத்து வருகிறது. அதேபோல ‘2.0’ படமும் மிகப்பெரிய சாதனை படைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இதை உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான தியேட்டர்களில் திரையிட திட்டமிட்டுள்ளனர். 

தமிழ், இந்தியில் உருவாகி வரும் ‘2.0’ படத்தை மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட இந்திய மொழிகளிலும், உலகில் அதிகமாக பேசப்படும் சீன மொழி உள்பட 15 மொழிகளில் 100க்கும் அதிகமாக நாடுகளில் வெளியிட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன என்றும் சொல்லப்படுகிறது.

Trending News