ரஜினியின் 2Point0 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!!

சங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியிருக்கும் 2Point0 திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்திருக்கிறார்கள்.

Updated: Jul 11, 2018, 10:14 AM IST
ரஜினியின் 2Point0 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!!
Courtesy: Twitter

சங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியிருக்கும் 2Point0 திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்திருக்கிறார்கள்.

கடந்த 2010-ல் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்திய ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகம் தான் 2Point0. இதில் ரஜினிகாந்த் ஜோடியாக எமிஜாக்சன் மற்றும் வில்லனாக ஹிந்தி நடிகர் அக்‌ஷய்குமார் நடித்துள்ளனர்.

இதன் படப்பிடிப்பு முடிந்து கடந்த தீபாவளிக்கே படத்தை திரைக்கு கொண்டு வர படக்குழுவினர் திட்டமிட்டு இருந்தனர். ஆனால் கிராபிக்ஸ் வேலைகள் திட்டமிட்டபடி முடியாததால் ரிலீஸ் தேதி மீண்டும் மீண்டும் தள்ளிப்போனது.

தற்போது படத்தின் இயக்குனர் சங்கர், கிராபிக்ஸ் பணிகள் விரைவில் முடிய இருப்பதாகவும், அதனால் படத்தை நவம்பர் மாதம் 29-ம் தேதி வெளியிட இருப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.