கூலி படத்தில் 32 வருட பழைய டையலாக்கை பேசிய ரஜினி!

Thalaivar 171 Rajinikanth Coolie Dialogue : ரஜினிகாந்த் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் புதிய படத்துக்கு கூலி என பெயர் சூட்டப்பட்டிருக்கும் நிலையில், இதில் 32 வருடங்களுக்கு முன்பு ரங்கா படத்தில் வரும் டையலாக்கை சூப்பர் ஸ்டார் மீண்டும் பேசியுள்ளார்.

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 22, 2024, 07:29 PM IST
  • தலைவர் 171 திரைப்படத்தின் டைட்டில்
  • 3 நிமிட டீசரில் வெளியிட்டு அறிவித்த சன்பிக்சர்ஸ்
  • கூலி என வைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு
கூலி படத்தில் 32 வருட பழைய டையலாக்கை பேசிய ரஜினி! title=

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் தலைவர் 171 திரைப்படம் உருவாகிறது. ஞானவேல் ராஜா இயக்கத்தில் வேட்டையன் திரைப்படத்தில் நடித்து வரும் சூப்பர் ஸ்டார், இந்தப் படத்துக்குப் பிறகு லோகேஷ் கனகராஜூடன் இணைய இருக்கிறார். அந்தப் படத்தை தலைவர் 171 என கூறி வந்த நிலையில், இப்போது 3 நிமிட டீசர் வெளியிட்டு படத்தின் தலைப்பை மாஸாக அறிவித்திருக்கிறது தயாரிப்பு நிறுவனம் சன்பிக்சர்ஸ்.

மேலும் படிக்க | Thalaivar 171 Title : தலைவர் 171 படத்தின் பெயர் ‘கூலி’! ரசிகர்களின் ரியாக்‌ஷன் என்ன?

இன்று தலைவர் 171 படத்தின் தலைப்பு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அதன்படி மாலை வெளியானது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜ் இணையும் இந்தப் படத்துக்கு ‘கூலி’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது என டீசரில் அறிவிக்கப்பட்டது. 1995 ஆம் ஆண்டு நடிகர் சரத்குமார் - மீனா நடிப்பில் வெளியான படத்தின் தலைப்பு இப்போது மீண்டும் ரஜினிகாந்தின் படத்திற்கு சூட்டப்பட்டிருக்கிறது. அத்தோடு மட்டுமல்லாமல் 32 வருடங்களுக்கு முன்பு ரங்கா படத்தில் பேசிய டையலாக்கையும் ரஜினிகாந்த் வரவிருக்கும் கூலி படத்திலும் பேசியிருக்கிறார்.

அப்பாவும் தாத்தாவும், 
வந்தார்கள் போனார்கள்..!!
தப்பென்ன சரியென்ன 
எப்போதும் விளையாடு..!!
அடப்பாவி என்பார்கள் 
தப்பாக நினைக்காதே..!!
எப்பாதை போனாலும் 
இன்பத்தை தள்ளாதே..!!
மதுவுண்டு பெண்ணுண்டு !!
சோறுண்டு சுகமுண்டு!!
மனமுண்டு என்றாலே !!
சொர்க்கத்தில் இடமுண்டு போடா!!

கண்ணதாசன் எழுத்தில் ரங்கா படத்தில் ரஜினிகாந்த் பேசிய இந்த வசனம் அப்போதே செம ஹிட். இப்போது மீண்டும் அதே டையலாக்கை கூலி படத்திலும் ரஜினிகாந்த் பேசியிருப்பது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அவருக்கே உரிய மாஸான ஸ்டைலில் கூலி டீசரிலும் வலம் வருகிறார். வில்லன்களை துவம்சம் செய்துவிட்டு கூலாக நாற்காலியில் அமர்ந்து, அவர் பேசும் இந்த டையலாக்கை பார்க்கும்போது புல்லகரிக்கிறது. அதனால், கூலி படத்துக்கு இப்போதே பெரும் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. டீசரை வைத்தே படம் செம ஹிட் என கொண்டாட தொடங்கியுள்ள ரஜினி ரசிகர்கள், வசூலிலும் புதிய உச்சம் என சமூக ஊடகங்களில் ரைட்டப் எழுதி தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். 

மேலும் படிக்க | Thalaivar 171 : தலைவர் 171 படத்தின் டைட்டில் இதுதான்! முன்கூட்டியே வெளியான தகவல்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News