பிக்பாஸ் புகழ்பெற்ற இந்திய தொலைக்காட்சி ரியாலிட்டி கேம் ஷோ ஆகும். இந்நிகழ்ச்சி முதலில் ஹிந்தி மொழியில் தொடங்கப்பட்டு, அதில் வெற்றி கண்டதும் படிப்படியாக தமிழ், தெலுங்கு, கன்னடம், பெங்காலி, மலையாளம் மற்றும் மராத்தி ஆகிய மொழிகளில் தொடங்கப்பட்டது. குறிப்பிட்ட நபர்களை ஒரு வீட்டிற்குள் அடைத்து வைத்து செல்போன், கடிகாரம் ஏதுமின்றி வெளியுலகத் தொடர்புகளற்று அவர்களின் உண்மையான முகத்தை வெளிக் கொண்டு வருவதே இந்நிகழ்ச்சி. இதில் ஒவ்வொரு வாரமும், ஒருவர் வெளியேற்றப்பட்டு இறுதியாக மக்கள் அளிக்கும் வாக்கு எண்ணிக்கையின் அடிப்படையில் ஒரு நபர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவருக்கு பரிசு வழங்கப்படும். இந்த நிகழ்ச்சிக்கு பல ரசிகர்கள் உள்ளனர்.
ALSO READ கமல் ஹாசனின் தற்போதைய நிலை என்ன? மருத்துவமனை விளக்கம்
பிக்பாஸ் வீட்டில் ஹவுஸ்மேட்ஸ்களுக்கு சகல வசதிகளும் செய்யப்பட்டிருக்கும். தமிழில் விஜய் டிவியில் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனை தொடர்ந்து இந்நிகழ்ச்சியின் 4 சீசன்கள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டு, 5வது சீசன் அக்டோபரில் தொடங்கபட்டு வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தது. இந்நிகழ்ச்சியின் அனைத்து சீசன்களையும் உலகநாயகன் கமலஹாசன் தான் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார்.
வாரம் இருநாட்கள் (சனி மற்றும் ஞாயிறு) கமல்ஹாசன் வந்து ஹவுஸ்மேட்ஸ்களின் நிறைகுறைகளை எடுத்துரைப்பார். இந்நிலையில் இவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. அதன் காரணமாக தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட இவர், இந்நிகழ்ச்சியில் இருந்து விலகினார். இவரின் விலகலை தொடர்ந்து அடுத்து யார் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார்? என்ற கேள்வி பரவலாக அனைவரிடமும் எழுந்தது.
சிம்பு, விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன் இந்த வார நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளனர் என்று பரவலாக பேசப்பட்டது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியினை நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் ஏற்கனவே சன் டிவியில் தொகுத்து வழங்கிய தங்கவேட்டை நிகழ்ச்சி நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இவர் 2019-ல் தெலுங்கு பிக்பாஸின் ஒரு சீசனில் சிறப்பு எபிசோடு ஒன்றை தொகுத்து வழங்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ BiggBoss Promo 'இது பக்கா கேம் ஃபிளான்' தாமரையை குறி வைக்கும் டான்ஸ் மாஸ்டர்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR