இனி புதுப்படங்களில் நடிக்கமாட்டேன்... பிக்பாஸ் பிரபலம் ரித்விகா

பிக்பாஸ் நிகழ்சியின் கோப்பை வென்ற ரித்விகா-விற்கு அடுத்த ஆண்டு திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!

Last Updated : Jan 22, 2019, 03:34 PM IST
இனி புதுப்படங்களில் நடிக்கமாட்டேன்... பிக்பாஸ் பிரபலம் ரித்விகா

பிக்பாஸ் நிகழ்சியின் கோப்பை வென்ற ரித்விகா-விற்கு அடுத்த ஆண்டு திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!

இயக்குனர் பா.ரஞ்சித்தின் ‘மெட்ராஸ்’, ‘கபாலி’ உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் ரித்விகா. பின்னர் தனியார் தொலைகாட்சி ஒன்றில் ஒளிப்பரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றதன் மூலம் மிகவும் பிரபலம் ஆனார். 

பிக்பாஸ் வெற்றிக்கு பின்னர் அதிக படங்களில் ஒப்ந்தம் ஆவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது பா.ரஞ்சித் தயாரிப்பில் உருவாகும் ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ என்னும் திரைப்படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்நிலையில் ரித்விகா தனக்கு விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது என்கிற தகவலை திரைப்பட விழா ஒன்றில் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில்... “நான் யாரோ ஒருவரை காதலித்து வருவதாகவும், அவருக்கும் எனக்கும் இந்த வருடம் திருமணம் நடக்கும் என்றும் சினிமா வட்டாரத்தில் ஒரு தகவல் பரவி இருக்கிறது. நான் இந்த வருடம் திருமணம் செய்து கொள்ளப்போவதில்லை.

என் திருமணம் அடுத்த ஆண்டு தான் நடைபெறும். அதற்குள் நான் நடிக்க வேண்டிய படங்களை நடித்து முடித்து விடுவேன். ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்களில் மட்டுமே நடிப்பேன். புதிய படங்கள் ஏதும் ஒப்பந்தமாகவில்லை. திருமணத்திற்கு பின்னர் நடிப்பதா வேண்டாமா என்பதை எனது கணவர் முடிவு செய்வார்.” என குறிப்பிட்டார்.

ரித்விகாவின் இந்த அதிரடி பதிலால் அவரது காதல் குறித்து பரவி வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. மேலும், அவரது திருமணம் குறித்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

More Stories

Trending News