சாமி-2 திரைப்படம் செப்டம்பர் 21 ஆம் நாள் திரைக்கு வரும் :அதிகாரபூர்வ அறிவிப்பு

நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் சாமி-2 திரைப்படம், இந்த மாதம் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

ZEE Web Team (Tamil) ZEE Web Team (தமிழ்) | Updated: Sep 14, 2018, 08:35 PM IST
சாமி-2 திரைப்படம் செப்டம்பர் 21 ஆம் நாள் திரைக்கு வரும் :அதிகாரபூர்வ அறிவிப்பு

இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் சாமி-2. இப்படம் வரும் செப்டம்பர் மாதம் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்திருந்தனர். படத்தின் தணிக்கை சான்று மற்றும் வெளியீட்டு தேதிக்கா திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திடன் விண்ணப்பிக்கப் பட்டுள்ளதாகவும் முன்னர் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், இன்று "சாமி-2" திரைப்படம், இந்த மாதம் (செப்டம்பர்) 21 ஆம் நாள் வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். தற்போது #SaamySquareFromSep21 என்ற ஹெஷ்டேக் சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆகி வருகிறது.

 

விக்ரம் மற்றும் த்ரிஷா ஜோடியாக நடித்து 2003-ல் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய படம் ‘சாமி’.  இந்த படத்தின் இரண்டாம் பாகம் 15 ஆண்டுகள் கழித்து எடுக்கப்பட்டுள்ளது. முதல் பாகத்தில் விக்ரமுக்கு ஜோடியாக த்ரிஷா நடித்தார். இரண்டாம் பாகத்தில் கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் பிரபு, ஜான் விஜய், ஓ.கே.சுந்தர், சூரி, சஞ்சீவ், இமான் அண்ணாச்சி, உமா ரியாஸ் கான் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இந்த இரண்டாம் பாகத்தில் த்ரிஷாவையும் முக்கிய கதாபாத்திரத்தில் ஒப்பந்தம் செய்தனர். படப்பிடிப்பு தொடங்கியதும் த்ரிஷா திடீரென்று ஒப்பந்தத்தில் இருந்து விலகிவிட்டதாக தனது டிவிட்டர் பாகத்தில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.