படப்பிடிப்பின் போது சமந்தாவிற்கு விபத்து..ரசிகர்கள் அதிர்ச்சி!

'குஷி' படத்தின் படப்பிடிப்பின் போது நடந்த ஸ்டண்ட் காட்சியில் சமந்தா மற்றும் விஜய் தேவரகொண்டாவிற்கு விபத்து ஏற்பட்டதாக செய்திகள் வெளியானது.  

Written by - RK Spark | Last Updated : May 24, 2022, 02:58 PM IST
  • குஷி படத்தின் படப்பிடிப்பு காஸ்மீரில் நடைபெற்று வருகிறது.
  • காமெடி கலந்த ரொமான்டிக் படமாக உருவாகிறது.
  • முதற்கட்ட படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது.
படப்பிடிப்பின் போது சமந்தாவிற்கு விபத்து..ரசிகர்கள் அதிர்ச்சி! title=

ஷிவா நிர்வாணா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா நடிக்கும் காமெடி கலந்த ரொமான்டிக் திரைப்படம் 'குஷி'.  விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா ஆகிய இருவருக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர், அவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக ஒரு சம்பவம் நடந்துள்ளது.  தற்போது சமந்தா மற்றும் விஜய் தேவரகொண்டா ஆகியோர் நடித்துக்கொண்டிருக்கும் படத்தின் ஸ்டண்ட் காட்சியின் போது இருவருக்கும் விபத்து ஏற்பட்டதாக ஊடங்களில் செய்திகள் வெளியானது.

மேலும் படிக்க | 'விக்ரம்' படத்தின் கதை ரஜினிக்காக எழுதப்பட்டதா? வெளியான தகவல்!

இவர்கள் நடித்து கொண்டிருக்கும் குஷி படத்தின், முதல்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் இருபது நாட்களாக வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது.  பின்னர் படக்குழு கடந்த திங்கட்கிழமையன்று ஹைதராபாத் திரும்பியதாக செய்திகள் வெளியான நிலையில், இவர்கள் இருவருக்கும் விபத்து ஏற்பட்டுவிட்டதாக டோலிவுட் மற்றும் பாலிவுட் வட்டாரங்களில் பரபரப்பாக செய்திகள் பரவியது.

vijay devarakonda

'குஷி' படப்பிடிப்பு காஷ்மீரில் பிரபலமாக உள்ள லிட்டர் நதியின் மேல் கார் மூலம் ஸ்டண்ட் செய்வது போன்ற காட்சி படம்பிடிக்கப்பட்டது.  அந்த காரில் சமந்தா மற்றும் விஜய் தேவரகொண்டா சென்றனர், அப்போது பாதுகாப்புக்காக காரில் கட்டப்பட்டு இருந்த கயிறு அறுந்தது.  பின்னர் அவர்கள் இருந்த கார் தண்ணீருக்குள் விழுந்தது, இதனால் அவர்கள் இருவருக்கும் முதுகு பக்கத்தில் சிறிய அளவில் அடிபட்டதாகவும், படக்குழு உடனடியாக அவர்களை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்ததாகவும் கூறப்பட்டது.  தற்போது படக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி சமந்தா மற்றும் விஜய் தேவரகொண்டா ஆகிய இருவருக்கும் எவ்வித பாதிப்பு இல்லையென்றும், நலமுடன் இருப்பதாகவும் கூறியுள்ளது.

மேலும் படிக்க | KGF-2வுக்கு பின் யஷ் நடிக்கும் படம்!- இயக்குநர் யார் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News