KGF-2வுக்கு பின் யஷ் நடிக்கும் படம்!- இயக்குநர் யார் தெரியுமா?

கேஜிஎஃப்-2வைத் தொடர்ந்து நடிகர் யஷ் அடுத்ததாக நடிக்கவுள்ள படம் பற்றிய புதிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 24, 2022, 02:22 PM IST
  • இயக்குநர் பிரசாந்த் நீல் சலார் படத்தில் பிஸியாக இருந்துவருகிறார்.
  • கேஜிஎஃப்-2வைத் தொடர்ந்து யஷ் நடிக்கவுள்ள அடுத்த படம் எது?
  • நடிகர் யஷ்ஷின் 19ஆவது படத்தை இயக்கப்போவது யார்?
KGF-2வுக்கு பின் யஷ் நடிக்கும் படம்!- இயக்குநர் யார் தெரியுமா? title=

கே.ஜி.எஃப்- 2 படத்துக்குப் பின்னர் பான் - இந்தியா ஸ்டார் எனும் அளவுக்கு வளர்ச்சியடைந்துள்ளார் நடிகர் யஷ்.

வசூலில் இந்திய அளவில் பிரம்மாண்ட சாதனை படைத்துள்ள இப்படம் இன்னும்கூட சில திரையரங்குகளில் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது. இப்படத்தையடுத்து இதன் 3ஆம் பாகமும் உருவாக இருக்கிறது. பிரபாஸ் நடித்துவரும் சலார் படத்தை இயக்கி முடித்ததும் அது தொடர்பான பணிகளில் இயக்குநர் பிரசாந்த் நீல் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் யஷ்ஷைப் பொறுத்தவரை கேஜிஎஃப்- 2வுக்குப் பின்னர் எந்தப் படத்திலும் கமிட் ஆகவில்லை. இதன் 3ஆம் பாகம் அடுத்த ஆண்டில் படப்பிடிப்பைத் தொடங்கி 2024இல் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த இடைவெளிக்குள்ளாக படம் ஒன்றில் நடிக்க யஷ் திட்டமிட்டுள்ளாராம்.

மேலும் படிக்க | விக்ரம்: படக்குழு செய்த அடுத்த மாஸான விளம்பரம் இதோ!

அவரது 19ஆவது படமான இதை கன்னடத்தில் வெளியான Mufti எனும் படத்தை இயக்கிய நார்தன் இயக்கவுள்ளாராம். வருகிற ஜூன் 2ஆம் தேதி இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஜூன் -2 ஆம் தேதி கேஜிஎஃப்-2வின் 50ஆவது நாள் எனும் காரணத்தால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாம். திரைப்படத்தின் கேஜிஎஃப்-2 வுக்குப் பின்னர் வெளியாகவுள்ளதால் இப்படத்துக்கும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மேலும் படிக்க | கெளதம் மேனன் பட நாயகியாகும் இயக்குநர் ஷங்கரின் மகள்?- அதுவும் இப்படியான ரோலா?!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News