இன்று பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறபோவது சனம்...வீடியோ

பிரபலமான ரியாலிட்டி ஷோ, பிக் பாஸ் தமிழ் சீசன் 4 இன்று ஒருவர் வெளியேற வேண்டும். இந்த எலிமிநேஷன் இல் நேற்று ஆரி மற்றும் ரம்யா ஆகியோர் காப்பாற்றப்பட்டனர். 

Written by - ZEE Bureau | Last Updated : Dec 6, 2020, 02:23 PM IST
    1. பிக் பாஸ் முதல் புரோமோ வெளியானது
    2. இந்த வாரம் வெளியேறப்போவது யார்?
    3. சனம் ஷெட்டிக்கு யார் யார் ஆதரவு?
இன்று பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறபோவது சனம்...வீடியோ

பிரபலமான ரியாலிட்டி ஷோ, பிக் பாஸ் தமிழ் சீசன் 4 இன்று ஒருவர் வெளியேற வேண்டும். இந்த எலிமிநேஷன் இல் நேற்று ஆரி மற்றும் ரம்யா ஆகியோர் காப்பாற்றப்பட்டனர். இதனை அடுத்து இன்றைய முதல் புரமோவில் சனம், அனிதா மற்றும் ஷிவானி ஆகிய மூவர் மீதம் இருப்பது போல காண்பிக்கப்பட்டனர்.

இவர்கள் மூவரில் யார் தங்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள் என நடிகர் கமல்ஹாசன் (Kamal Haasan) பிக் பாஸ் (Bigg Boss Tamilஹவுஸ்மேட்ஸ்களின் விருப்பத்தை கேட்டார். அப்போது சனம் ஷெட்டிக்கு (Sanam Shettyஆதரவு குவிந்தது. சனம்ஷெட்டி தங்க வேண்டுமென விரும்புவதாக ரியோ (Rio Raj), அர்ச்சனா, நிஷா, ஆரி, ரம்யா, ஆகியோர் தெரிவித்தனர். 

ALSO READ | வீடியோ: கேள்விக்கு மேல் கேள்வி கேட்கும் பாலா மற்றும் அனிதா; தத்தளிக்கும் ஆரி!

 

இதற்கிடையில் அனிதா (Anitha Sampathவெளியே போக வேண்டும் என ஆரி கூறினார். அதற்கு குறுக்கிட்ட கமல் ’யார் தங்க வேண்டும் என்றுதான் நான் கேள்வி கேட்டேன்’ என்று கூற அதனை அடுத்து அவர் ’சனம்’ என்று கூறினார். 

அதேபோல் அனிதா தங்க வேண்டும் என ஆஜித்தும், ஷிவானி தங்க வேண்டும் என சோம் மற்றும் பாலாஜியும் (Balaji Murugadossதெரிவித்தனர். இதன் அடிபடையில் சனம்ஷெட்டிக்கு ஹவுஸ்மேட்ஸ்களின் ஆதரவு குவிந்தது. ஆனால் இந்த வாரம் அவர் தான் வெளியேறி இருப்பதாக தகவல்கள் கசிந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ | பிக் பாஸ் தமிழ் 4: கண்ணீரில் பாலா: "யாரையாவது காயப்படுத்தினால் மன்னிக்கவும், ஆனால்

More Stories

Trending News