சந்தியா ராகம்: சத்தியம் கேட்ட ஜானகி.. மாயா கொடுத்த அதிர்ச்சிம், நடந்தது என்ன?

Sandhya Raagam Today's Episode Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சந்தியா ராகம். இந்த சீரியலில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 22, 2024, 06:25 PM IST
  • சத்தியம் கேட்ட ஜானகி.
  • மாயா கொடுத்த அதிர்ச்சிம், நடந்தது என்ன?
  • சந்தியா ராகம் இன்றைய எபிசோட் அப்டேட்
சந்தியா ராகம்: சத்தியம் கேட்ட ஜானகி.. மாயா கொடுத்த அதிர்ச்சிம், நடந்தது என்ன?  title=

தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘சந்தியா ராகம்’ சீரியல்.

சந்தியா ராகம் : இன்றைய எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சந்தியா ராகம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ஜானகி மாயாவிடம் சீனு விஷயம் சம்மந்தமாக பேச முடிவெடுத்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

மேலும் படிக்க | தீரஜின் 'பிள்ளையார் சுழி' அனைவரையும் மகிழ்விக்கும்

அதாவது, ஜானகி மாயாவிடம் வந்து உன்கிட்ட நான் கொஞ்சம் தனியாக பேசணும் என்று சொல்கிறாள், மாயாவும் சொல்லுங்க பெரியம்மா என்று ஜானகியுடன் தனியாக வருகிறாள். அடுத்து ஜானகி மாயாவிடம் 20 வருஷத்துக்கு முன்னாடி உங்க அம்மா எனக்கு ஒரு சத்தியம் பண்ணி கொடுத்தா, ஆனால் அதை நிறைவேற்றல.. இப்போ நீ எனக்கு ஒரு சத்தியம் பண்ணி கொடு அதை நீயாவது நிறைவேற்று என்று சொல்லி கேட்கிறாள். 

அடுத்து ஜானகிக்கு சத்தியம் செய்து கொடுக்க போன மாயா திடீரென சத்தியம் செய்யாமல் எங்க அம்மா செய்து கொடுத்த சத்தியத்தை மீறல என்று சொன்னதும் ஜானகி அதிர்ச்சியாகி என்ன சொல்ற என்று கேட்கிறாள். பிறகு 20 வருடத்திற்கு முன்னாடி பிளாஷ்கட் ஒபனாகிறது. சந்தியா கர்ப்பமாக இருக்க அவளும் கிஷோரும் நம்ம குழந்தை வெளிநாட்டில் பிறக்க கூடாது இந்தியாவில் தான் பிறக்கணும் என்று முடிவெடுகின்றனர். 

உடனே ரகுராமின் பக்கத்துக்கு ஊரில் இருக்கும் ஹாஸ்பிடலில் அட்மிட் செய்ய படுகிறாள் சந்தியா. பெருசாக எந்தவொரு வசதியும் இல்லாத அந்த ஹாஸ்ப்பிடலில் திடீரென கரண்ட் கட் ஆகி விட ஜெனரேட்டருக்கு ஏற்பாடு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இந்த ஊரில் ரகுராம் வீட்டில் மட்டும் தான் ஜெனெரேட்டர் இருக்கிறது என்பதால் நர்ஸ் ஒருவருடன் கிஷோர் கிளம்பி வருகிறார். 

இந்த நேரத்தில் சந்தியாவிற்கு பிரசவ வலி ஏற்படுகிறது. இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சந்தியா ராகம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

மேலும் படிக்க | கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா.. சம்பளத்தையும் உயர்த்தினார்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News