சசிகுமாரின் ‘அசுரவதம்’ படத்தின் ட்ரைலர் வெளியிடு!!

சசிகுமார் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘அசுரவதம்’ படத்தின் ட்ரைலர் நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார். 

Last Updated : Mar 15, 2018, 06:29 PM IST
சசிகுமாரின் ‘அசுரவதம்’ படத்தின் ட்ரைலர் வெளியிடு!! title=

இயக்குனர் மருது பாண்டியன் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘அசுரவதம்’. செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் லீனா லலித்குமார் தயாரித்துள்ளார். இந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடிகை நந்திதா நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஒளிப்பதிவு எஸ்.ஆர்.கதிர் மற்றும் இசை கோவிந்த் மேனன் அமைத்துள்ளார்.

ஏற்கனவே இயக்குனர் கவுதம் மேனன் வெளியிட்ட இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. அடுத்த மாதம் ஏப்ரல் 13-ம் தேதி ‘அசுரவதம்’ வெளியாகவுள்ளது என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், இன்று ‘அசுரவதம்’ படத்தின் ட்ரைலர் நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார். 

ட்ரைலர்:

Trending News