சீதா ராமன் அப்டேட்: நான்சியிடம் சிக்கிய அர்ச்சனா.. பளாரென விழுந்த அடி

Seetha Raman Today's Episode Update: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதாராமன்.   

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 15, 2024, 12:57 PM IST
  • குடோனிற்கு வரும் நான்சி, அர்ச்சனா.
  • பளாரென அறைந்த நான்சி.
  • கல்பனாவுடன் வீட்டிற்கு வரும் நான்சி.
சீதா ராமன் அப்டேட்: நான்சியிடம் சிக்கிய அர்ச்சனா.. பளாரென விழுந்த அடி title=

தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘சீதா ராமன்’ சீரியல்.

சீதா ராமன் : இன்றைய எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ராஜசேகர் ராம் ஸ்டேஷனுக்கு டிரான்ஸவர் வாங்கி கொண்டு வந்த  நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

குடோனிற்கு வரும் நான்சி அர்ச்சனா

அதாவது நான்சி அர்ச்சனாவை கூட்டி கொண்டு ஓரிடத்திற்கு கிளம்ப அர்ச்சனா எங்கே என்று கேட்க நான்சி எதையும் சொல்லாமல் கூட்டி வருகிறாள். அதன் பிறகு ஒரு குடோனிற்கு வருகின்றனர். மகாவை கொன்னது நீதானே என்று நான்சி கேட்க அர்ச்சனா இல்லை என்று சமாளிக்கிறாள். 

பளாரென அறைந்த நான்சி

உடனே நான்சி பளாரென அறைந்து எனக்கு எல்லாமே தெரியும், கொஞ்சம் அங்க பாரு என்று கல்பனாவை வாயை அடைத்து கட்டி போட்டிருப்பதை காட்ட அர்ச்சனா அதிர்ச்சி அடைகிறாள். பிறகு நாங்க ரெண்டு பேரும் பிளான் பண்ணோம். ஆனால் நாங்க கொல்லல என்று சொல்கிறாள். 

நான்சி எனக்கு கல்பனாவை வச்சி சில வேலைகள் இருக்கு என்று சொல்லி அவளை அர்ச்சனா கெட்டப்பிற்கு மாற்றி வீட்டிற்கு  அழைத்து வருகிறாள். இங்கே வீட்டில் ராமும் ராஜசேகரும் வர சீதா அப்பாவை ஆரத்தி எடுத்து வீட்டிற்கு அழைத்து செல்கிறாள். ராம் ராஜசேகர் டிரான்ஸர் வாங்கிட்டு வந்த விஷயத்தை சொல்லி இந்த ஏற்பாடுகளை செய்தது தெரிய வருகிறது. 

மேலும் படிக்க | SK 23: சிவகார்த்திகேயன்-ஏ.ஆர்.முருகதாஸ் படத்தின் ஷூட்டிங் தொடக்கம்! ஹீரோயின் யார் தெரியுமா?

கல்பனாவுடன் வீட்டிற்கு வரும் நான்சி

அடுத்து நான்சி கல்பனாவுடன் வீட்டிற்கு வர அது அர்ச்சனா என்று நினைத்து அவளையும் சுபாஷையும் நிற்க வைத்து கல்யாண நாளை கேக் வெட்டி கொண்டாட வைக்கின்றனர். 

காணத்தவறாதீர்கள்

இப்படியான  நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

சீதா ராமன்: சீரியலை எங்கு பார்ப்பது?

சீதா ராமன் சீரியல் 2023 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 

மேலும் படிக்க | Arjun Das: மலையாள சினிமாவில் கால் பதிக்கும் அர்ஜுன் தாஸ்! இயக்குநர் இவரா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News