சீதா ராமன் அப்டேட்: உயிரோடு புதைக்கப்படும் சீதா.. ராம் செய்யப்போவது என்ன?

Seetha Raman Today's Episode Update: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதாராமன்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 15, 2023, 01:00 PM IST
  • சீதா ராமன் : இன்றைய எபிசோட்.
  • சீதாவை புதைக்க திட்டமிடும் ரவுடிகள்.
  • கலங்கி துடிக்கும் ராம்.
சீதா ராமன் அப்டேட்: உயிரோடு புதைக்கப்படும் சீதா.. ராம் செய்யப்போவது என்ன? title=

தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘சீதா ராமன்’ சீரியல்.

சீதா ராமன் : இன்றைய எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதாராமன். 

இந்த சீரியலில் நேற்றைய எபிசோட்டில் சீதா ரவுடிகளிடம் இருந்து தப்பிக்க முயற்சி செய்த நிலையில் இன்று ரவுடிகள் அவர் தலையில் செங்கலை எடுத்து அடித்து கீழே சரிய வைக்கின்றனர். 

மறுபக்கம் அஞ்சலி சத்யா மற்றும் பிரியா என மூவரும் காலேஜிலிருந்து வீட்டுக்கு வர மீரா இவங்க தான் ஏதாவது செய்திருக்க வேண்டும் என்று சொல்ல சத்தியனும் சப்போர்ட் செய்து பேசுகிறான்.

மேலும் படிக்க | 22 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வெளியாகும் கமல்ஹாசனின் படம்!

சீதாவை புதைக்க திட்டமிடும் ரவுடிகள்

பிறகு இவர்களை போலீசை வைத்து தான் விசாரிக்க வேண்டும் என சொல்லிவிட்டு ராம் ரூமுக்குள் சென்று அதை நினைத்து வருத்தப்பட்டு அழுகிறான். இங்கே ரவுடிகள் சீதாவை இப்படியே விடுவது நல்லது இல்லை என உயிரோடு புதைத்து விட திட்டம் போடுகின்றனர்.  

கலங்கி துடிக்கும் ராம்

இங்கே ராம் ரூமில் முத்தாரம்மன் போட்டோவை வைத்துக் கொண்டு சீதாவை நினைத்து கலங்கி துடிக்க மறுபக்கம் ரவுடிகள் சீதாவை ஒரு சிமெண்ட் தொட்டிக்குள் வைத்து புதைக்க முயன்று வருகின்றனர். 

காணத்தவறாதீர்கள்

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

சீதா ராமன்: சீரியலை எங்கு பார்ப்பது?

சீதா ராமன் சீரியல் 2023 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 

மேலும் படிக்க | 800 திரைப்படத்தின் OTT வெளியீட்டு தேதி! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News