ஆர்.ஜே.பாலாஜியின் படத்தில் நடிக்கும் லோகேஷ் கனகராஜ்! என்ன கேரக்டர் தெரியுமா?

Lokesh Kanagaraj Cameo: பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ், பிரபல நடிகர் ஒருவரின் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Written by - Yuvashree | Last Updated : Nov 14, 2023, 01:30 PM IST
  • ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் உருவாகியுள்ள படம், சிங்கப்பூர் சலூன்.
  • இதில் லோகேஷ் கனகராஜ் கேமியோ கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.
  • லோகேஷின் கதாப்பாத்திரம் குறித்த தகவள் வெளியாகியுள்ளது.
ஆர்.ஜே.பாலாஜியின் படத்தில் நடிக்கும் லோகேஷ் கனகராஜ்! என்ன கேரக்டர் தெரியுமா?  title=

‘லியோ’ படத்தை இயக்கி மீண்டும் ரசிகர்கள் மனங்களில் இடம் பிடித்துள்ளவர், லோகேஷ் கனகராஜ். நடிகரும் இயக்குநருமான ஆர்.ஜே.பாலாஜி ஹீரோவாக நடிக்கும் படத்தில் இவர் கேமியோ கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. 

சிங்கப்பூர் சலூன்..

பிரபல ரேடியோ நிறுவனத்தில் ஆர்.ஜேவாக இருந்து தற்போது நடிகராகவும் இய்ககுநராகவும் திரைக்கதை எழுத்தாளராகவும் வளர்ந்துள்ளவர், ஆர்.ஜே.பாலாஜி. எல்.கே.ஜி, மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம் போன்ற படங்களின் வரிசையில் சிங்கப்பூர் சலூன் என்ற படத்திலும் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படத்தை கோகுல் இயக்கியுள்ளார். இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா, ஜுங்கா போன்ற படங்களை இயக்கி கவனம் ஈர்த்த இயக்குநர் இவர். 

கேமியோ கதாப்பாத்திரத்தில் லோகேஷ் கனகராஜ்..

மாநகரம் படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர், லோகேஷ் கனகராஜ். அதை தொடர்ந்து ‘கைதி’ படம் மூலம் ப்ளாக் பஸ்ட்ர் ஹிட் கொடுத்த இவர், இதையடுத்து விஜய்யை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கினார். இந்த படத்தில் கடைசியாக சிகரெட்டை வாயில் வைத்துக்காெண்டு ஜெயில் கைதியாக நடித்திருந்தார். இப்படத்தை பார்த்தவர்கள், விஜய்யின் எண்டிரியின் போது கூச்சலிட்டார்களோ இல்லயோ, லோகேஷிற்காக கைத்தட்டி விசிலடித்தனர். அதன் பிறகு, லோகி தான் இயக்கிய எந்த படத்திலும் நடிக்கவில்லை. தற்பாேது ஆர்.ஜே.பாலாஜியின் சிங்கப்பூர் சலூன் படத்தில் இவர் கேமியோ கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. 

singapore saloon

சிங்கப்பூர் சலூன் படத்தின் டைட்டிலிற்கு ஏற்றார் போல, இப்படத்தின் ஹீரோ ஆர்.ஜே.பாலாஜி சலூன் கடை வைத்திருப்பவராக நடித்துள்ளாராம். இதில், லோகேஷ் கனகராஜ், அவரது கதாப்பாத்திரமாகவே நடிக்கிறாராம். இப்படம், பெரிய கனவுகளுடன் சலூன் கடை நடத்தி வரும் ஒரு இளைஞனை பற்றிய கதை என கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | லண்டன் வீடு முதல் சென்னை பிளாட் வரை: கமல்ஹாசனின் சொத்து மதிப்பு!

இருவரும் ஏற்கனவே நண்பர்கள்..

லோகேஷ் கனகராஜ்ஜும், ஆர்.ஜே.பாலாஜியும் ஏற்கனவே நண்பர்கள். இருவரும் வெவ்வேறு காலக்கட்டத்தில் திரையுலகிற்குள் வந்தவர்கள் என்றாலும், பட ப்ரமோஷன்களின் போதும் அவ்வப்போது பார்டீக்களின் போதும் இருவரும் சந்தித்து கொண்டதாக கூறப்படுகறிது. ஆர்.ஜே.பாலாஜி கேட்டு கொண்டதற்கிணங்க லோகேஷ், சிங்கப்பூர் சலூன் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. 

ஆர்.ஜே.பாலாஜியின் வெற்றி படங்கள்..

ஆர்.ஜே.பாலாஜியை பல வருடங்களாக பலருக்கும் ரேடியோ நிகழ்ச்சி தொகுப்பாளராகவே தெரிந்ததிருந்தது. மெல்ல சினிமாவிற்கு நடிக்க வந்த இவர், முன்னணி ஹீரோக்களின் படங்களில் அவருக்கு நண்பனாக காமெடி கதாப்பாத்திரங்களில் நடித்து கொண்டிருந்தார். 2019ஆம் ஆண்டு வெளியான எல்.கே.ஜி படம் இவருக்கு ஹீரோ என்ற பெயரை தேடி தந்தது. இப்படத்தின் திரைக்கதை இவருடையது, பிரபு என்ற இயக்குநர் இப்படத்தினை இயக்கியிருந்தார். முதல் படத்திலேயே முத்தான வெற்றி கிடைத்த பிறகு, 2020ஆம் ஆண்டு நயன்தாராவை வைத்து மூக்குத்தி அம்மன் படத்தை இயக்கினார். இதுவும் வெற்றியடைந்த நிலையில், அடுத்து வீட்ல விசேஷம், ரன் பேபி ரன் போன்ற படங்களை எடுத்தார். இதில் வீட்ல விசேஷம் திரைப்படம் குடும்ப ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினை பெற்று வசூலையும் குவித்தது. அதிகமாக பேசிக்கொண்டே இருக்கும் ஆர்.ஜே பாலாஜி, மிகவும் குறைவாக பேசி புதிதான தொனியில் நடித்திருந்த த்ரில்லர் படம், ரன் பேபி ரன். இப்படம் ரசிகர்களிடம் அவ்வளவாக நல்ல வரவேற்பினை பெறவில்லை. இதையடுத்த இவருக்கு சிங்கப்பூர் சலூன் படம் ஏறுமுகத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் படிக்க | ஓடிடியில் வெளியாகும் படங்களை டவுன்லோட் செய்வது எப்படி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News