சீதா ராமன் அப்டேட்: வீட்டுக்கு வந்து மகாவுக்கு ஷாக் கொடுத்த ரவுடி.. மரண பயத்தை காட்டிய சீதா

Seetha Raman Today's Episode Update: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதாராமன். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 22, 2023, 12:36 PM IST
  • சந்தேகப்படும் சீதா.
  • மகாவிடம் பேசும் அர்ச்சனா.
  • மகா, அர்ச்சனாவுக்கு அதிர்ச்சி.
சீதா ராமன் அப்டேட்: வீட்டுக்கு வந்து மகாவுக்கு ஷாக் கொடுத்த ரவுடி.. மரண பயத்தை காட்டிய சீதா title=

தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘சீதா ராமன்’ சீரியல்.

சீதா ராமன் : இன்றைய எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன், இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ராஜசேகர் குற்றவாளியை கண்டுபிடிக்கும் வேளையில் இறங்கிய நிலையில் மஹா அர்ச்சனாவின் கையை பாலில் விட வைத்து அந்த போட்டோவை எடுத்து விட்டாள். இதனை தொடர்ந்து இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

சந்தேகப்படும் சீதா

அதாவது இவர்கள் ஏதோ மறைக்குற மாதிரி இருக்கே என்று சீதா சந்தேகம் அடைகிறாள், அப்போது வேலைக்காரி அர்ச்சனாவுக்கு மருந்து போட்டு விசிறி கொண்டிருக்கும் போது சீதா மீராவுக்கு போன் போட்டு அந்த ரவுடியை பிடிச்சிட்டாங்களாம், இதை செய்ய சொன்னது யார்னு மட்டும் தான் கண்டு பிடிக்கணும், இன்னைக்குள் பிடித்து விடுவார்களாம் என்று சொல்ல அதை கேட்டு அர்ச்சனா அதிர்ச்சி அடைகிறாள். 

மகாவிடம் பேசும் அர்ச்சனா

அதன் பிறகு ராம் சீதாவுக்காக ஐஸ் கிரீம் வாங்கி வந்து கொடுத்து அவளுடன் பேச இருவருக்கும் இடையே ரொமான்ஸ் நடக்கிறது, அர்ச்சனா மகாவிடம் சென்று சீதா போனில் பேசிய விஷயத்தை சொல்ல மகா ரவுடிக்கு போன் போட்டு பேச அவன் பணத்தை கேட்டு மிரட்டுகிறான், மகா நீ இருக்க இடத்துக்கு எல்லாம் என்னால் வர முடியாது என்று போனை வைத்து விடுகிறாள். 

மேலும் படிக்க | நயன்தாராவுடன் நடிக்க நடிகர் ஜெய் வாங்கிய சம்பளம் எவ்வளவு?

மகா, அர்ச்சனாவுக்கு அதிர்ச்சி

இதனால் ரவுடி வீட்டிற்கு வந்து நிற்க மகாவும் அர்ச்சனாவும் அதிர்ச்சி அடைகின்றனர். அதன் பிறகு ராம் அங்கு வர தெரிந்தவர் என்று சொல்லி சமாளித்து உள்ளே அழைத்து செல்ல முயற்சிக்க சீதா வந்து விடுகிறாள்.

காணத்தவறாதீர்கள்

 இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

சீதா ராமன்: சீரியலை எங்கு பார்ப்பது?

சீதா ராமன் சீரியல் 2023 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 

மேலும் படிக்க | அடுத்த மாதம் 2 நாட்கள் எந்த ஒரு படப்பிடிப்பும் நடைபெறாது - திரையுலகம் அறிவிப்பு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News