சீதா ராமன் அப்டேட்: சீதா கொடுத்த ஷாக்.. மகாலட்சுமிக்கு அடுத்தடுத்து காத்திருந்த அதிர்ச்சி

Seetha Raman Today's Episode Update: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதாராமன்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 9, 2023, 02:32 PM IST
  • சீதா ராமன் : இன்றைய எபிசோட்.
  • சீதாவுடன் வாக்குவாதம் செய்யும் மகா.
  • சீதாவுக்கு சபோர்ட் செய்யும் சேதுபதி.
சீதா ராமன் அப்டேட்: சீதா கொடுத்த ஷாக்.. மகாலட்சுமிக்கு அடுத்தடுத்து காத்திருந்த அதிர்ச்சி title=

தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘சீதா ராமன்’ சீரியல்.

சீதா ராமன் : இன்றைய எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதாராமன். 

இந்த சீரியல் நேற்றைய எபிசோடில் சீதா சாட்டையை எடுத்து மூன்று பெண்களை மிரட்ட இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அதாவது மூவரும் ஓடி வந்து மகாலட்சுமியிடம் கம்ப்ளைன்ட் செய்ய சீதா கைகள் இரண்டையும் பின்னாடி கட்டிக் கொண்டு என்ற கொடுக்க சாட்டையுடன் தான் வருகிறாள் என நினைத்து இவர்கள் போட்டுக் கொடுக்க கடைசியில் அவள் ஸ்பூனை எடுத்துக்காட்டி ஷாக் கொடுக்கிறாள். 

சீதாவுடன் வாக்குவாதம் செய்யும் மகா

பாத்திரங்கள் அனைத்தையும் துலக்க வேண்டும் என்று சொல்லி மூன்று பெண்களையும் கூட்டிச் சென்று வேலை வாங்க மகாலட்சுமி சீதாவிடம் கோபப்பட்டு வாக்குவாதம் செய்ய ராம் அங்கு வர அவனிடம் கம்ப்ளைன்ட் செய்கிறார். 

சீதா உங்களை மன்னிப்பு கேட்க சொன்னது தப்புதான் அதுக்காக நான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுக்கிறேன், ஆனா அதுக்காக எல்லாத்துக்கும் இப்படி பண்ண வேண்டாம் என்று பதிலடி கொடுக்கிறார். 

மேலும் படிக்க | நடிகர் யோகிபாபுவின் குடும்ப புகைப்படம் இணையத்தில் வைரல்!

சீதாவுக்கு சபோர்ட் செய்யும் சேதுபதி

அதைத்தொடர்ந்து சேதுபதியும் சீதாவிடம் பொறுப்பு கொடுத்தது தான் சரி என்று பேச மகாலட்சுமி சேதுவிடமும் வாதம் செய்கிறாள். சீதா மூன்று பெண்களின் வேலை வாங்கிவிட்டு அப்படி நகரும்போது இவர்கள் மூவரும் எஸ்கேப் ஆகி மகாலட்சுமியிடம் முறையிட வருகின்றனர்.

மகாலட்சுமி தியானத்தில் இருக்க இவர்கள் விஷயத்தில் சொல்ல அர்ச்சனாவும் மகாவும் சேர்ந்து இதற்கு ஒரு முடிவு கட்டியாக வேண்டும் என திட்டம் போடுகின்றனர். 

காணத்தவறாதீர்கள்

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

சீதா ராமன்: சீரியலை எங்கு பார்ப்பது?

சீதா ராமன் சீரியல் 2023 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 

மேலும் படிக்க | The Trail - தெலுங்கில் வெளியாகும் முதல் விசாரணை திரைப்படம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News