சீதா ராமன் அப்டேட்: மதுமிதாவை மீட்ட மகா.‌. சீதா விடும் சவால் - இன்றைய எபிசோட் அப்டேட்

Seetha Raman Today's Episode Update: மதுமிதாவை வீட்டுக்கு அழைத்து வர சதி செய்யும் மகாலட்சுமி. சீதா என்ன செய்வாள்? இன்றைய எபிசோட் அப்டேட் இதோ.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 23, 2023, 11:35 AM IST
  • ராமுடன் அமர்ந்து சாப்பிடும் சீதா.
  • மகாலட்சுமிக்கு ஷாக் கொடுக்கும் சீதா.
  • சீதாவை அடிக்க கை ஓங்கும் மகா.
சீதா ராமன் அப்டேட்: மதுமிதாவை மீட்ட மகா.‌. சீதா விடும் சவால் - இன்றைய எபிசோட் அப்டேட் title=

தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘சீதா ராமன்’ சீரியல்.

சீதா ராமன் : இன்றைய எபிசோட்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதாராமன்.

இந்த சீரியலில் ராஜசேகர் மதுமிதாவை ஒரு ரூமில் அடைத்து வைத்துள்ள நிலையில் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

ராமுடன் அமர்ந்து சாப்பிடும் சீதா

அதாவது மீரா சீதா எதுக்கு கீழே உட்கார்ந்து சாப்பிடணும் மேல உக்காந்து சாப்பிடட்டும் என சொல்ல ராமும் அவளை மேலே உட்கார்ந்து சாப்பிட கூப்பிட சீதா உட்கார எழுந்து வந்ததும் மகாலட்சுமியின் டீம் கோபப்பட்டு எழுந்து சென்று விடுகின்றனர். பிறகு சீதா ராம் பக்கத்தில் உட்கார்ந்து சாப்பிடும் போது மீராவிடம் எங்க ஜோடி பொருத்தம் எப்படி என சைகையில் கேட்டு சந்தோஷம் அடைகிறாள்.

மேலும் படிக்க | தீராக் காதல் பட கதாப்பாத்திரங்களை அறிமுகம் செய்த படக்குழு

அதனைத் தொடர்ந்து சூர்யா டிஎஸ்பி உடன் குலசேகரப்பட்டினம் போலீஸ் ஸ்டேஷனுக்கு வர டிஎஸ்பி மதுமிதா பற்றி விசாரிக்க ராஜசேகர் மதுமிதா இருக்கும் இடத்தைக் காட்ட டிஎஸ்பி அங்கிருந்து மதுமிதாவை வெளியே விட சொல்கிறார்.

பிறகு ராஜசேகர், ‘நீங்க நினைக்கிற மாதிரி மகாலட்சுமி நல்லவ கிடையாது. தயவுசெய்து சென்னைக்கு போக வேண்டாம்’ என கெஞ்சி கேட்கிறார்.

மதுமிதா எங்களை பிரிக்க நினைக்கிற நீங்க தான் நல்லவங்க கிடையாது என சண்டை போட்டு கிளம்பி செல்கிறாள். 

மகாலட்சுமிக்கு ஷாக் கொடுக்கும் சீதா

அதன் பிறகு ராஜசேகர் சீதாவுக்கு போன் செய்து இந்த விஷயங்களை சொல்ல அவள் வருத்தப்பட, அப்போது அங்கு வரும் மகாலட்சுமி நீயும் உங்க அப்பாவும் என்னதான் முயற்சி செய்தாலும் மதுமிதாவை இந்த வீட்டுக்கு கொண்டு வராமல் விடமாட்டேன் என சவால் விட, ஏன் உங்க வீட்டுல எல்லாருக்கும் இரண்டு கல்யாணம்தான் பண்ணுவீங்களா? என கேட்டு ஷாக் கொடுக்கிறாள் சீதா.  

மேலும் படிக்க | 63 வருட திரை வாழ்வு... தமிழ் சினிமாவின் காட்ஃபாதர்... கமல்ஹாசனின் சாதனை பயணம் இதோ!

சீதாவை அடிக்க கை ஓங்கும் மகா

இதனால் கோபப்பட்டு சீதாவை மகா அறைய போக மீரா தடுத்து நிறுத்துகிறாள். பிறகு மகா மதுமிதாவை இந்த வீட்டுக்கு கண்டிப்பா கொண்டு வருவேன் என சவால் விட, சீதா அவ என்னுடைய அக்கா நீங்க நினைக்கிறது எல்லாம் நடக்காது என பதிலுக்கு சவால் விடுகிறாள். 

காணத்தவறாதீர்கள்

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

சீதா ராமன்: : சீரியலை எங்கு பார்ப்பது?

சீதா ராமன் சீரியல் 2023 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 

மேலும் படிக்க | நான் முன்பே விளக்கமளித்துவிட்டேன்.. அனுராக் காஷ்யப்புக்கு பதிலளித்த விக்ரம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News