'சமந்தா காட்டில் செம மழை' தோல்வி படத்திற்கு 4 விருதுகள்..ஹாலிவுட்டிலும் என்ட்ரி கொடுக்கிறார்!

Samantha: சாகுந்தலம் பட நடிகை சமந்தா, அடுத்து ஹாலிவுட் படத்தில் நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவரது சாகுந்தலம் படம் பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு மிகக்குறைவான வசூலையே பெற்றது.   

Written by - Yuvashree | Last Updated : May 31, 2023, 01:19 PM IST
  • சமந்தா நடித்த சாகுந்தலம் படம், தோல்வி. இதற்கு 4 விருதுகள் கிடைத்துள்ளது.
  • சமந்தா அடுத்து ஹாலிவுட்டிற்குள் எண்ட்ரி கொடுத்துள்ளார்.
  • இந்த படத்தில் இருபாலின ஈர்ப்பு கொண்ட தமிழ் பெண்ணாக நடிக்க இருக்கிறார்.
'சமந்தா காட்டில் செம மழை' தோல்வி படத்திற்கு 4 விருதுகள்..ஹாலிவுட்டிலும் என்ட்ரி கொடுக்கிறார்! title=

சமீபத்தில் சாகுந்தலம் படத்தில் சகுந்தலை கதாப்பாத்திரத்தில நடித்திருந்தவர், சமந்தா. இவர், தமிழில் மாஸ்கோவின் காவிரி படத்தின் மூலம் அறிமுகமானார். விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீ-மேக்கில் நடித்திருந்தார். ஆரம்பத்திலிருந்தே இவருக்கு ஏற்றம் கொடுத்த சினிமா வாழ்க்கை அவ்வப்போது சறுக்கினாலும் தனது பெயரை தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் நிலை நிறுத்தி வைத்துள்ளார். சமீபத்தில் பாலிவுட் பக்கம் சென்ற இவர், சிட்டல் எனும் தொடரில் நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து, இவருக்கு பாலிவுட் வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன. 

சாகுந்தலம் தோல்வி..

வாரிசு பட தயாரிப்பாளர் தில் ராஜு சாகுந்தலம் படத்தை தயாரித்திருந்தார். மகாபாரதத்தில் வரும் சகுந்தலை எனும் கதாப்பாத்திரத்தை அடிப்படையாக வைத்து இந்த படம் உறுவாக்கப்பட்டிருந்தது. இதில், சமந்தாவிற்கு ஜோடியாக தேவ் மோகன் நடித்திருந்தார். கெளதமி, அதிதி பாலன், மதுபாலா உள்ளிட்ட பலர் நடித்திருந்தும் படம் தோல்வியை தழுவியது. படத்தின் இசையும் இதில் இடம் பெற்றிருந்த சில காட்சிகளும் மெகா சீரியலை உணர்த்தியதாக சில ரசிகர்கள் கருத்து கூறினர். இதுவே இப்படத்தின் தோல்விக்கு முக்கிய காரணமாக கருதப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி வெளியாகியிருந்த இந்த சுமார் 65கோடி செலவில் உருவாக்கப்பட்டிருந்தது. ஆனால், இப்படத்தின் வசூல் 10 கோடியை கூட தாண்டவில்லை என கூறப்பட்டது. 

4 விருதுகள்..

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியான இப்படம் தோல்வியடைந்ததை ஒட்டி இது அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியிடப்பட்டது. ஆனால் அந்த தளத்தில் கூட இப்படத்தை பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆர்வம் காட்டவில்லை. ரசிகர்களால் ஓரங்கட்டப்பட்ட இப்படம் தற்போது, வரிசையாக 4 விருதுகளை வாங்கி குவித்துள்ளது. இந்தியாவில் மெகா சீரியல் எனக்கூறி வரவேற்பை பெறாத இப்படம், வெளிநாட்டில் விருதுகளை வாங்கியது எப்படி? 

மேலும் படிக்க | Tamanna: தமன்னாவிற்கு விரைவில் திருமணம்? பாலிவுட் பிரபலம் சொன்ன பதில் இதுதான்!

“எப்புட்றா..”

சமந்தாவிற்கு என்னதான் பெரிய ரசிகர் கூட்டம் இருந்தாலும், நல்ல கதையை தேந்தெடுத்து நடித்தால்தான் அந்த படத்திற்கு ரசிகர்கள் வரவேற்பு அளிப்பர். அப்படி இந்திய ரசிகர்களை ஈர்க்காத சாகுந்தலம் திரைப்படம், கேன்ஸ் திரைப்பட விருது விழா உள்பட பல்வேறு விழாக்களில் விருதுகளை வாங்கியுள்ளது. சில தினங்களுக்கு முன்னர் ஃப்ரான்ஸில் உள்ள பாரிஸ் நகரில் கேன்ஸ் திரைப்பட விழா நடைப்பெற்றது. இந்த விழாவிலும் சிறந்த வெளிநாட்டு படத்திற்கான விருதையும் சிறந்த காஸ்டியூம் டிசைனிற்கான விருததையும் இப்படம் வென்றுள்ளது. அது மட்டுமல்ல சிறந்த பேண்டசி பிலிம், சிறந்த இந்தியன் பிலிம் என மொத்தம் நான்கு விருதினையும் வென்றுள்ளது. இதைப்பார்த்த ரசிகர்கள் ‘ஏய் எப்புட்ரா..’ என வாய்பிளந்துள்ளன். 

ஹாலிவுட்டிற்குள் எண்ட்ரி கொடுக்கும் சமந்தா..

ஹாலிவுட்ட்ல் 2004ஆம் ஆண்டு வெளியான தி அரேஞ்ச்மண்ட்ஸ் ஆஃப் லவ் (The Arrangements of Love) எனும் புத்தகத்தை தழுவி, ஹாலிவுட்டில் ஒரு  படம் தயாராகவுள்ளது. இந்த படத்தில், சமந்தா, இருபாலின ஈர்ப்பு கொண்ட (Bisexual) துப்பறியும் ஏஜெண்டாக நடிக்கிறார். இவர், இதில் ஒரு தமிழ் பெண் என்பது குறிப்பிடத்தக்கது. இதை விவேக் கார்லா என்பவர் இயக்குகிறார். இந்த படத்திற்கு சென்னை ஸ்டோரி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. 

லைன் கட்டி நிற்கும் சமந்தாவின் படங்கள்:

தற்போது சிட்டடல் தொடரின் இந்திய வர்ஷனில் வருன் தவானுடன் இணைந்து  நடித்து வருகிறார், சமந்தா. இதனுடன் சேர்ந்து, விஜய் தேவரகொண்டாவுடன் குஷி படத்திலும் நடித்து வருகிறார். கோலிவுட், டோலிவுட் என்றிருந்த நம்ம சமந்தா, இப்போது ஹாலிவுட் பக்கம் சென்றிருப்பது பலருக்கும் மகிழ்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் “சமந்தா காட்டுல மழைதான்..” என்றி கமெண்ட் அடித்து வருகின்றனர். இந்த வருடம்..சமந்தா வருடம்.

மேலும் படிக்க | பாகுபலி நடிகருக்கு வில்லனாக கமல்? 20 நாட்கள் கால்ஷீட்டிற்கு இத்தனை கோடி சம்பளமா..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News