இயக்குனர் மிஷ்கின் அடுத்தப் படத்தில் சாந்தனு நடிக்கின்றாரா?

இயக்குனர் மிஷ்கின் படைப்பினை எதிர்நோக்கி காத்திருக்கும் ரசிகர்களுக்கு ஓர் இன்ப செய்தி!

Last Updated : Mar 14, 2018, 06:49 PM IST
இயக்குனர் மிஷ்கின் அடுத்தப் படத்தில் சாந்தனு நடிக்கின்றாரா? title=

இயக்குனர் மிஷ்கின் படைப்பினை எதிர்நோக்கி காத்திருக்கும் ரசிகர்களுக்கு ஓர் இன்ப செய்தி!

பிசாசு, யுத்தம் செய், அஞ்சாதே, ஓநாயும் ஆட்டுக்குட்டியும் போன்ற எதிர்பார்க முடியாத திரைப்படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளைக் கொண்டவர் இயக்குனர் மிஷ்கின். இவர் தற்போது தனது அடுத்த படத்திற்கு தயாரிகிவிட்டார் என தெரிகிறது. அவரது அடுத்த படைப்பினில் திரைகதை வித்தகர் பாக்கியராஜ் அவர்களின் மகன் சாந்தனு முதன்மை கதாப்பாத்திரம் ஏற்க உள்ளார் என தெரிகிறது.

சுட்ட கதை, நலனும் நந்தினியும், நட்புனா என்னானு தெரியுமா படங்களை தயாரித்த லிப்பிரா ப்ரடக்ஷன்ஸ் இப்படத்தினை தயாரிக்க உள்ளது. மேலும் பிரபல ஒளிப்பதிவாளர் PC ஸ்ரீராம் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய உள்ளதாகவும் தெரிகிறது.

இந்த தகவலுக்கு ஏற்றார்போல் இவர்கள் நான்கு பேரும் இணைந்திருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இப்படத்தில் இடம்பெறவுள்ள மற்ற கலைஞர்கள் விவரங்கள் குறித்து விரைவில் வெளியிடப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது!

Trending News