இதயம் சீரியல் : போலீசில் சிக்கும் பாரதி.. அதிரடி என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை

Idhayam Today's Episode Update: போலீசில் சிக்கும் பாரதி.. அதிரடி என்ட்ரி கொடுக்கும் பிரபல சீரியல் நடிகை - இதயம் சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்   

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 13, 2024, 10:57 AM IST
  • இதயம் சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்
  • அதிரடி என்ட்ரி கொடுக்கும் பிரபல சீரியல் நடிகை.
  • போலீசில் சிக்கும் பாரதி
இதயம் சீரியல் : போலீசில் சிக்கும் பாரதி.. அதிரடி என்ட்ரி கொடுக்கும் பிரபல  நடிகை title=

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி  வரை தினமும் மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் இதயம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் பாரதியும் ஆதியும் 
சேர்ந்து ஆதியின் அப்பாவுக்கு திதி கொடுத்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அதாவது, சாரதா இதுவரை நடந்த விஷயங்களை நினைத்து பார்த்து உட்கார்ந்திருக்க ஆதி வந்ததும் அவனிடம் உனக்கு கல்யாணம் ஆனதில் இருந்து தொடர்ந்து நிறைய பிரச்சனை, நீ உன்னுடைய வாழ்க்கையை தொடங்கவே ஆரம்பிக்கல என்று சொல்கிறாள், அதனால் வெளியே எங்கயாவது போயிட்டு வாங்க என்று சொல்கிறாள். 

பிறகு மேலே வந்த ஆதி பாரதியிடம் நாம ஹனிமூன் போகலாம் என்று சொல்ல பாரதி யாரை கேட்டு முடிவு பண்ணீங்க? நாம ஹனிமூன் போனால் தமிழை யார் பார்த்துகிறது என்று கேள்வி எழுப்ப அதுக்கு நான் ஒரு ஏற்பாடு செய்திருக்கேன் என்று ஆதி சொல்கிறான். அவன் சொல்லி முடித்ததும் கிராமத்தில் இருந்து ராணி என்ற பெயரில் ( தவமாய் தவமிருந்து புகழ் ஆர்த்தி )  பெண் வீட்டிற்குள் என்ட்ரி கொடுக்கிறாள். 

வீட்டில் இருப்பவர்கள் யார் என்று கேட்க ஆதி அங்கு என்ட்ரி கொடுத்து ராணியை எல்லாருக்கும் அறிமுகம் செய்து வைத்து தமிழை பார்த்துக் கொள்ள வந்திருப்பதாக சொல்கிறான். ராணி தமிழை அழைத்து சென்ற பிறகு இப்போ ஓகே வா என்று ஆதி பாரதியிடம் ரொமான்ஸ் செய்கிறான். 

அடுத்து ஆபிஸ் வந்த பாரதி ஸ்வேதாவிடம் லீவ் கேட்க அவள் லீவ் எல்லாம் கொடுக்க முடியாது என்று சொல்கிறாள், ஹனிமூன் போக போறோம், அதுக்காக லீவ் வேண்டும் என்று கேட்க ஸ்வேதா பண பேக்கை கொடுத்து இதை பேங்கில் டெபாசிட் பண்ணிடு என்று ஆபிஸ் காரில் அனுப்பி வைக்க ரவுடிகள் காரை வழிமறித்து பாரதியிடம் இருந்து பணத்தை கொள்ளையடித்து செல்கின்றனர். 

மேலும் படிக்க | Samantha : நிர்வாண புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்ட சமந்தா!? ரசிகர்கள் அதிர்ச்சி..

பாரதி ஆபிஸ் வந்து விஷயத்தை சொல்ல ஸ்வேதா நீதான் ஏதோ பிளான் பண்ணி இருக்க என்று பாரதி மீது பழியை போட்டு போலீசில் புகார் கொடுக்க போலீஸ் பாரதியை விசாரிக்க வருகின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய இதயம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

மேலும் படிக்க | Samantha : அடையாளமே தெரியாமல் மாறிப்போன சமந்தா! வைரல் புகைப்படம்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News