'அர்ஜுன் ரெட்டி' - ஆதித்யா வர்மா படக்குழுவின் முக்கிய அறிவிப்பு

தெலுங்கு ‘அர்ஜுன் ரெட்டி' திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக‌ 'ஆதித்ய வர்மா' படத்தின்,  படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக படக்குழு அறிவித்துள்ளது.

Last Updated : May 15, 2019, 12:05 PM IST
'அர்ஜுன் ரெட்டி' - ஆதித்யா வர்மா படக்குழுவின் முக்கிய அறிவிப்பு title=

தெலுங்கு ‘அர்ஜுன் ரெட்டி' திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக‌ 'ஆதித்ய வர்மா' படத்தின்,  படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக படக்குழு அறிவித்துள்ளது.

தெலுங்கு மொழில் அர்ஜூன் ரெட்டி என்ற பெயரில் சமீபத்தில் வெளியாகி வெற்றி நடைப்போட்ட திரைப்படம் ‘அர்ஜூன் ரெட்டி’. இத்திரைப்படத்தின் தமிழ் பதிப்பினை நடிகர் துருவ் நடிப்பில் தமிழில் வர்மா என்னும் பெயரில் B Studios நிறுவனம் தயாரித்தது. விரைவில் இந்த திரைப்படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இத்திரைப்படம் கைவிடப்பட்டதாக படக்குழுவினர் அறிவித்தனர்.

தெலுங்கில் E4 Entertainment தயாரிக்க, இயங்குநர் சந்தீப் வங்கா இயக்கியிருந்தார். இப்படத்தினை தமிழில் வெளியிட விரும்பிய இந்நிறுவனம் இயக்குநர் பாலா தலைமையில் செயல்மடும்  B Studios நிறுவனத்துடன் அதற்கான ஒப்பந்தத்தை கையெழுத்திட்டது. ஒப்பந்தத்தின் படி இயக்குநர் பாலா இயக்கத்தில் நடிகர் விக்ரம் மகன் துருவ் நடிக்க தமிழில் வர்மா என்னும் பெயரில் உருவானது. வெளியீடு வரை இத்திரைப்படம் வந்த நிலையில் தெலுங்கு பதிப்பில் இருந்து தமிழ் பதிப்பு வேறுபட்டிருப்பதாக கூறி வர்மா படத்தை கைவிடுவதாக தயாரிப்பு நிறுவனத்தார் தெரிவித்தனர். மேலும் விரைவில் புது குழுவுடன் மீண்டும் இத்திரைப்படம் இயக்கப்படும் எனவும் அறிவித்திருந்தனர்.

அந்தவகையில் இப்படத்தின் தமிழ் பதிப்பில் நடிக்கவிருக்கும் புது குழு அறிவிக்கப்பட்டுள்ளது. படத்திற்கு பெயர் ‘ஆதித்யா வர்மா’ என சூட்டப்பட்டுள்ளது.

‘ஆதித்யா வர்மா’ திரைப்படத்தினை இயக்குநர் சந்தீப் வாங்காவிடம் முதல்நிலை உதவி இயக்குநராக பணிபுரிந்த கிரிசாய்யா இயக்கவுள்ளார். ஒளிப்பதிவாளராக ரவி.கே.சந்திரனும், இசையமைப்பாளராக ரதனும் பணிபுரியவுள்ளனர். துருவ் விக்ரம் நாயகனாகவும், அவருக்கு நாயகியாக பனிடா சாந்து ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மேலும் பிரியா ஆனந்த் மற்றும் புதுமுகங்கள் பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் ஆதித்ய வர்மா படத்தின்,  படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும் படம் ஜூன் இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

 

Trending News