கேரளாவில் பிரபல பாடகர் ஒருவர் மேடையில் பாடிக்கொண்டிருந்தபோதே உயிரைவிட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இசையமைப்பாளர் கேஜே ஜாய் இசையமைத்த ரகு வம்சம் எனும் படத்தில் இடம்பெற்ற ‘அழித்திரா மரக்கல்’ எனும் பாடல் மூலமாக திரைத்துறையில் பின்னணிப் பாடகராக அறிமுகம் ஆனவர் எடவா பஷீர். மலையாளத்தில் பல ஹிட் பாடல்களைப் பாடியுள்ள இவர் இசைத்துறையில் பல விருதுகளையும் பெற்றுள்ளார். இந்நிலையில், கேரளாவின் ஆழப்புழா அருகே நிகழ்ச்சி ஒன்று நடந்துள்ளது.
‘ப்ளூ டைமண்ட்ஸ்’ என்ற இசைக்குழுவின் 50 ஆம் ஆண்டு பொன்விழாக் கொண்டாட்டத்துக்கான அந்த இசை நிகழ்ச்சியில் எடவா பஷீரும் கலந்துகொண்டார். அந்த வகையில், கே.ஜே.யேசுதாஸ் பாடிய இந்தி பாடலான ‘மானா ஹோ தம்’ எனும் பாடலை எடவா பஷீர் மேடையில் பாடிக்கொண்டிருந்தார். பாடிக்கொண்டே இருந்தவர் திடீரென மேடையிலேயே திடீரென சரிந்து கீழே விழுந்தார்.
இதையடுத்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உடனடியாக அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். எடவா பஷீர் மாரடைப்பால் உயிரிழந்ததாகக் கூறப்படும் நிலையில், அவரது உடல் கொல்லத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
ഗാനമേളയിൽ പാടവേ കുഴഞ്ഞ് വീണ് ഇടവ ബഷീർ അന്തരിച്ചു | Edava Basheer #KeralaNews #EdavaBasheer #ZeeMalayalamNews pic.twitter.com/ZoIGj4Iwg6
— Zee Malayalam News (@ZeeMalayalam) May 29, 2022
பாடகர் எடவா பஷீரின் திடீர் மறைவு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்குத் திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் படிக்க | ஷங்கர் இயக்கும் ராம் சரண் படத்தின் டைட்டில்! - தலைப்புக்கு இதுதான் ரீஸனா?!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR