’கோமாளி டூ குக்’ சிவாங்கி என்டிரிக்கு அனல் பறந்த செட்: புகழ் ரியாக்ஷன்

குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் இதுவரை கோமாளியாக இருந்த ஷிவாங்கி இந்த சீசனில் குக்காக புரோமோஷன் பெற்றுள்ளார். அவர் ஷெட்டுக்குள் வந்ததும் எப்போதும் போல் அலப்பறைகள் களைகட்டியது.

Written by - S.Karthikeyan | Last Updated : Jan 28, 2023, 04:19 PM IST
 ’கோமாளி டூ குக்’ சிவாங்கி என்டிரிக்கு அனல் பறந்த செட்: புகழ் ரியாக்ஷன்

விஜய் டிவியில் பெஸ்ட் என்டர்டெயின்மென்ட் நிகழ்ச்சியாக இருக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 4வது சீசன் தொடங்கியுள்ளது. எப்போதும் போல் அலப்பறை விளையாட்டுகளுக்கு பஞ்சமில்லாமல் இந்த சீசனும் தொடங்கியிருக்கிறது. குக் வித் கோமாளியில் இதுவரை கோமாளிகளாக இருந்தவர்களில் சிலர் இந்த சீசனில் மாற்றப்பட்டு புதிய கோமாளிகள் களமிறக்கப்பட்டுள்ளனர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பாதியில் வெளியேறிய ஜிபி முத்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். 

மேலும் படிக்க | Pathan box office collection: ஷாருக்கானின் 'பதான்' முதல் நாள் வசூல் எவ்வளவு?

வழக்கம்போல் புகழ், தர்ஷன் உள்ளிட்டோரும் இருக்க, அந்த டீமில் அலப்பறையின் உச்சமாக இருந்த ஒரே ஒருவர் மட்டும் மிஸ்ஸிங். அதாவது ஷிவாங்கி கோமாளி டீமில் காணவில்லை. அவர் இல்லாமல் குக் வித் கோமாளி நிகழ்ச்சியா? என ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருக்கும்போது சர்பிரைஸாக என்ட்ரி கொடுத்தார் ஷிவாங்கி. ஒரு ஃபார்முல் ஷெப் போல் உடையணிந்து கொண்டு, என்ட்ரி சாங்கில் நடனமாடி முடித்துவிட்டு கம்பீரமாக வந்தார். அவர் வந்ததுமே அரங்கம் முழுவதும் கைத்தட்டல்கள் ஒருபுறம் எழுந்து கொண்டிருக்க, போட்டியாளர்கள் முதல் நடுவர்கள் மற்றும் சக கோமாளிகளிடையே புன்னகை தாண்டவமாடியது.

என்ட்ரி சாங் முடிந்தவுடன் கிண்டல்களும் கேலிகளும் அனல் பறந்தது. நான் இந்த முறை கோமாளியாக வரவில்லை. ஒரு குக்காக வந்திருக்கிறேன் என 3 மாதம் சமையல் கோர்ஸ் முடிந்த சர்பிக்கேட்டையும் கையோடு எடுத்துக் கொண்டு வந்தார் சிவாங்கி. அதனைப் பார்த்த புகழுக்கு செம ஷாக். நான் இத்தனை நாட்கள் கோமாளியாகவே இருக்க, ஷிவாங்கிக்கு மட்டும் புரோமோஷன் கொடுத்துவிட்டார்களே என அவர் எண்ணும்போதே நடுவர் வெங்டேஷ் பட் கிண்டலாக புகழை பார்த்து இதனை கேட்டும் விட்டார். உடனே எல்லோரும் வயிறு குலுங்க சிரிக்க, ஆட்டம்பாட்டத்துடன் தொடங்கிவிட்டது குக் வித் கோமாளி சீசன் 4. எப்போதும் கோமாளியாக கலக்கும் சிவாங்கி, இந்த சீசனில் ஒரு கைதேர்ந்த சமையல் கலைஞராக கலக்க இருக்கிறார். 

மேலும் படிக்க | சமூகத்திற்கு தேவையான ஒரு நல்ல கருத்து.. "அயலி" வெப்தொடர் எப்படி உள்ளது? விமர்சனம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

More Stories

Trending News