உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டதா ‘மாவீரன்’ திரைப்படம்..?

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள ‘மாவீரன்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. இந்த படம் உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டதா என்ற கேள்வி எழுந்த போது பட இயக்குநர் மடோன் அஷ்வின் ஒரு பதிலை கூறியிருக்கிறார்.   

Written by - Yuvashree | Last Updated : Jul 15, 2023, 10:33 AM IST
  • சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படம் நேற்று வெளியானது.
  • இந்த படத்தை மடோன் அஷ்வின் இயக்கியிருந்தார்.
  • இப்படம் குறித்த சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.
உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டதா ‘மாவீரன்’ திரைப்படம்..?  title=

முதன்முறையாக சிவகார்த்திகேயன் ஃபேண்டசி ஜானரில் நடித்துள்ள படம், மாவீரன். இந்த படத்தில் சரிதா, மிஷ்கின், மோனிஷா, அதிதி ஷங்கர் என பலர் நடித்துள்ளனர். மண்டேலா பட இயக்குநர் மடோன் அஷ்வின் இந்த படத்தினை இயக்கியுள்ளார். மக்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பினை ஏற்படுத்திய இப்படம், தற்போது நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. 

எதைப்பற்றிய படம்? 

மாவீரன் திரைப்படத்தின் ட்ரைலர் மற்றும் டீசர் வெளியான போதே இப்படம் ஃபேண்டசி கலந்த ஆக்ஷன் படமாக இருக்கும் என்பதை ரசிகர்கள் கணித்து விட்டனர். அது போலவே, படமும் பல புணையப்பட்ட மாயாஜாலம் நிரம்பிய கதையாக இருந்தது. இந்த படத்தில் குறிப்பாக ஹீரோவும் அவன் குடும்பமும் தங்கியிருக்கும் ஒரு பெரிய கட்டடத்தை காண்பித்திருப்பர். ‘மக்கள் மாளிகை’ என்ற பெயரில் மக்களுக்காக கட்டப்பட்டிருக்கும் இந்த வீட்டில் இருந்துதான் கதையே ஆரம்பிக்கும். இந்த கட்டத்தை சுற்றிதான் கதை அமைக்கப்பட்டிருக்கும். அதில் வாழும் மக்கள் படும் துன்பத்தையும் இயக்குநர் காட்சிப்படுத்தியிருப்பார். இந்நிலையில், இந்த கட்டமும் மக்கள் படும் இன்னல்களும் உண்மை என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும் படிக்க | அதுக்குள்ள இத்தனை கோடி வசூலா..! ‘மாவீரன்’ படத்தின் முதல் நாள் கலக்ஷன்..!

உண்மை சம்பவம்..

மாவீரன் நேற்று திரைக்கு வந்த நிலையில் படத்தின் இயக்குநர் மடோன் அஷ்வினும், நடிகர் சிவகார்த்திகேயனும் ரசிகர்களுடன் ஒன்றாக படம் பார்த்தனர். இதையடுத்து, அவர்கள் வெளியில் வந்த செய்தியாளர்களை சந்தித்த போது சில கேள்விகள் கேட்கப்பட்டது. அப்போது பேசிய மடோன் அஷ்வின், இந்த படத்தை சில உண்மை சம்பவங்களை வைத்து எடுத்ததாகவும் சென்னை கே.பி பார்க்கில் உள்ள ஒரு ஹவுசிங் போர்டு கட்டத்திலும் இதே போன்ற ஒரு பிரச்சனை உள்ளதாகவும் அதை ஒரு எடுத்துக்காட்டாக வைத்து இந்த படத்தை எடுத்ததாகவும் அவர் கூறினார். யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் இந்த படத்தில் எந்த காட்சிகளும் இடம் பெறவில்லை எனவும் அவர் கூறினார். 

‘மாவீரன்’ பட பிரச்சனை..

மாவீரன் இடம் பெற்றிருந்த அரசியல் கட்சியின் கொடி, இந்திய ஜனநாயக கட்சியின் கொடி என கூறி அந்த படத்திற்கு தடை கேட்டு, அக்கட்சியின் P. ஜெயசீலன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரிக்கப்பட்டதை தொடர்ந்து, படத்திற்கு தடை விதிக்க முடியாது என நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஜனநாயக கட்சியின் கொடியை பிரதிபலிக்காத வகையில் படத்தில் இடம் பெற்றிள்ள கொடி நிறம் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்றும் அதன் பின்னரே ஓடிடி மற்றும் சாட்டிலைட சேனல்களில் படம் ஒளிபரப்பாக வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், மாவீரன் படத்தில் எந்த அரசியல் கட்சியையும் குறிப்படவில்லை என 40 வினாடிகளுக்கு பொறுப்புத் துறப்பை (Disclaimer) போட்ட பின்னரே திரையரங்குகளில் வெளியிட வேண்டுமெனவும் உத்தவரிட்டனர். 

கம்-பேக் கொடுத்தாரா சிவகார்த்திகேயன்..? 

தொகுப்பாளராக சின்னத்திரையில் மக்களை மகிழ்வித்த சிவகார்த்திகேயன் இன்று பெரிய திரை ஹீரோக்களில் முதன்மையானவர்களின் பட்டியலில் இருக்கிறார். கடைசியாக இவர் நடித்திருந்த ‘டான்’ திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றிருந்தாலும், விமர்சன ரீதியாக பயங்கர அடி வாங்கியது. இதையடுத்து வெளிவந்த ‘பிரின்ஸ்’ திரைப்படமும் பெரும் சறுக்கலை சந்தித்தது. ‘மாவீரன்’ திரைப்படம் இவருக்கு கம்-பேக் படமாக அமையும் என எதிர்பார்க்கப்பட்டது. அதே போலவே அப்படம் இவருக்கு நல்ல பெயரை பெற்று கொடுத்துள்ளது. 

மேலும் படிக்க | ‘லியோ’ படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவு..! லோகேஷ் கனகராஜ் மகிழ்ச்சி ட்வீட்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News