அதுக்குள்ள இத்தனை கோடி வசூலா..! ‘மாவீரன்’ படத்தின் முதல் நாள் கலக்ஷன்..!

Maaveeran 1st Day Box Office Collection: சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள ‘மாவீரன்’ படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. இதன் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா..? 

Written by - Yuvashree | Last Updated : Jul 15, 2023, 08:33 AM IST
  • மாவீரன் திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.
  • சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்துள்ளார்.
  • படத்தின் முதல் நாள் கலக்‌ஷன் எவ்வளவு தெரியுமா?
அதுக்குள்ள இத்தனை கோடி வசூலா..! ‘மாவீரன்’ படத்தின் முதல் நாள் கலக்ஷன்..! title=

மடோன் அஷ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்துள்ள படம், மாவீரன். இந்த படத்தில் அதிதி ஷங்கர், சரிதா, மிஷ்கின், சுனில் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். படம், நேற்று (ஜூலை 14) வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. இதன் முதல்நாள் வசூல் எவ்வளவு தெரியுமா..? 

‘மாவீரன்’ திரைப்படம்:

‘மண்டேலா’ பட இயக்குநர் மடோன் அஷ்வின் இயக்கத்தில் அடுத்து வெளியாகியுள்ள படம் ‘மாவீரன்’. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்க அதிதி ஷங்கர் நாயகியாக நடித்துள்ளார். சரிதா, மோனிஷா பிளஸ்ஸி, மிஷ்கின் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். சூப்பர் ஹீரோ-ஃபேண்டசி கதை பாணியில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. முதல் நாளிலேயே படம் ரசிகர்கள் மத்தியில் பாசிடிவான விமர்சனங்களை பெற்று, திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வருகிறது. 

மேலும் படிக்க | சிவகார்த்திகேயனின் மாவீரன் படம் எப்படி உள்ளது? திரைவிமர்சனம்!

முதல்நாள் கலக்ஷன்:

‘மாவீரன்’ படம் தமிழ் நாடு மட்டுமன்றி ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களிலும் வெளியாகியுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகிளல் வெளியாகியுள்ள இப்படம், ரிலீஸான அனைத்து இடங்களிலும் வசூல் மழையை குவித்து வருகிறது. இதன் முதல் நாள் கலக்ஷன் மட்டுமே 8-10 கோடி ரூபாய் வரை இருக்கும் என பேசப்படுகிறது. இதில், தமிழகத்தில் மட்டும் 6-8 கோடி ரூபாய் வரை மாவீரன் படம் வசூல் செய்திருக்கும் என்றும் வெளிநாடுகளில் 1-2 கோடி ரூபாய் வரை வசூல் செய்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. 

முதன்முறையாக ஃபேண்டசி படத்தில் சிவா..

‘மாவீரன்’ திரைப்படத்தின் டீசர் மற்றும் ட்ரைலர் வெளியான போது ரசிகர்கள் மத்தியில் அதீத எதிர்பார்ப்பு எழுந்தது. காரணம், சிவகார்த்திகேயன் இதற்கு முன்னர் இது போன்ற ஃபேண்டசி படங்களில் நடித்ததில்லை என்பதுதான். மேலும், இதுவரை இல்லாத அளவிற்கு பாதி படத்திற்கு மேல் ஆக்ஷன் காட்சிகளிலும் நடித்திருந்தார். இது மட்டுமன்றி, ‘மக்கள் செல்வன்’ என்று அழைக்கப்படும் விஜய் சேதுபதியும் இந்த படத்திற்கு குரல் கொடுத்திருந்ததால் ரசிகர்கள் படு குஷியில் படத்தை பாேய் பார்ததனர். 

மாவீரன் படம் எப்படியிருக்கு..? 

மாவீரன் படத்தை பார்த்த பல ரசிகர்கள் படம் முழுக்க சிரிப்பு வெடிகளாக உள்ளதாகவும் கொடுத்த காசுக்கு நல்ல படத்தை பார்த்த உணர்வு இருந்ததாகவும் தெரிவித்திருந்தனர். மேலும், படத்தின் முதல் பாதி போனதே தெரியவில்லை என்றும் இரண்டாம் பாதி மிகவும் நீளமாக இருந்ததாகவும் படம் விமர்சித்துள்ளனர். 

நீண்ட நாட்களுக்கு பிறகு சரிதா..

பழைய படங்களில் நாயகியாகவும் துணை கதாப்பாத்திரமாகவும் நடித்து வந்த சரிதா, சில ஆண்டுகளுக்கு முன்பிருந்து திரை உலகில் தலை காண்பிப்பதை நிறுத்திக்கொண்டார். நீண்ட நாட்களுக்கு பிறகு அவரது கம்-பேக் திரைப்படமாக மாவீரன் அமைந்துள்ளது. இதில், சிவகார்த்திகயேனுக்கு ‘ரக்கட்’ அம்மாவாக நடித்து மிகவும் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இவரது நடிப்பும் ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது. 

படத்தில் ‘குக் வித் கோமாளி’ பிரபலம்..

குக் வித் கோமாளியின் நான்காவது சீசனில் கோமாளியாக அறிமுகமாக மோனிஷா பிளஸ்ஸி, மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக நடித்துள்ளார். படம் முழுவதும் பயணிக்கும் கதாப்பாத்திரங்களுள் இவரும் ஒருவர். இவரது நடிப்பிற்கும் பாராட்டு குவிந்து வருகிறது. 

மேலும் படிக்க | ஹீரோவாக களமிறங்கும் நடிகர் விஜய்யின் மகன்..! பிரபல நடிகையின் மகள்தான் கதாநாயகியா..?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News