கெட்டப்பில் கெத்து காட்டும் சூர்யா!! "காப்பான்" திரைப்படத்தின் ட்ரைலர் வெளியீடு

சூரியா நடிப்பில் உருவாகியுள்ள "காப்பான்" திரைப்படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகி உள்ளது.

ZEE Bureau ZH Web (தமிழ்) | Updated: Sep 4, 2019, 08:41 PM IST
கெட்டப்பில் கெத்து காட்டும் சூர்யா!! "காப்பான்" திரைப்படத்தின் ட்ரைலர் வெளியீடு
Pic Courtesy : Youtube Grab

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் காப்பான். இந்தப் படத்தில் மோகன்லால், ஆர்யா, சாயிஷா சைகல், பொமன் இரானி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் நடிகர் மோகன்லால் இந்திய பிரதமராகவும், அவருக்கு பாதுகாப்பளிக்கும் உயர் அதிகாரியாக சூர்யாவும் நடித்துள்ளனர். பொமன் இரானி, ஆர்யா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க, விவேக் பாடல்கள் எழுதுகிறார். கே.வி.ஆனந்த், பட்டுக்கோட்டை பிரபாகர், கபிலன் வைரமுத்து மூவரும் இந்தப் படத்தின் திரைக்கதையை எழுதியுள்ளனர்.

செப்டம்பர் 20 ஆம் தேதி திரைக்கு வர உள்ள "காப்பான்" திரைப்படத்தின் ட்ரைலரை இன்று படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.